223 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியிடம் இலங்கை படுதோல்வி
England won odi series 2-1 vs sri lanka: இலங்கை அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து 223 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
லண்டனில் நடந்த இலங்கைக்கு எதிரான போட்டியில், இங்கிலாந்து அணி 223 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.
கடைசி ஒருநாள் போட்டி
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டி லண்டனில் நடந்தது.
முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 355 ஓட்டங்கள் குவித்தது. டாம் பான்டன் 126 ஓட்டங்கள் விளாசினார்.
பின்னர் ஆடிய இலங்கை அணி 29.1 ஓவர்களில் 132 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக குசல் மெண்டிஸ் 35 ஓட்டங்கள் எடுத்தார்.

இங்கிலாந்தின் லியாம் டாவ்ஸன் 3 விக்கெட்டுகளும், கஸ் அட்கின்சன் 2 விக்கெட்டுகளும், சோனி, வில் ஜேக்ஸ், ஜோ ரூட் மற்றும் ஜேமி ஓவர்டன் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
