மேற்கிந்திய தீவுகளுக்கு அதிர்ச்சி தோல்வியை பரிசளித்த ஜிம்பாப்வே மகளிர் படை
Zimbabwe women beat west indies by 4 wickets: மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில், ஜிம்பாப்வே 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஹராரேயில் நடந்த 2வது ஒருநாள் போட்டியில், ஜிம்பாப்வே மகளிர் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியது.
சுருண்ட மேற்கிந்திய தீவுகள்
ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் முதலில் துடுப்பாடியது.
ஜிம்பாப்வே அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் மேற்கிந்திய தீவுகள் 139 ஓட்டங்களுக்கு சுருண்டது.
அதிகபட்சமாக ஸ்டபாணி டெய்லர் 47 ஓட்டங்களும், அணித்தலைவர் ஹேலே மேத்யூஸ் 26 ஓட்டங்களும் எடுத்தனர். யாஷா வான்சுரா 4 விக்கெட்டுகளும், மைக்கேல் மவுங்கா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
ஜிம்பாப்வே வெற்றி
பின்னர் ஆடிய ஜிம்பாப்வே அணி 40.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 140 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
மோடெஸ்டர் 38 ஓட்டங்களும், கேலிஸ் 30 ஓட்டங்களும், கோமோ 30 ஓட்டங்களும் எடுத்தனர். அஃபை ஃப்ளெட்சர், ஆலியா மற்றும் முனிசார் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
