மெஸ்ஸியை தடுப்பதற்கான வழிகளை..இங்கிலாந்து பயிற்சியாளர் கூறிய விடயம்
அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸியை தடுப்பது குறித்த வழிகளை கண்டுபிடித்து வருவதாக இங்கிலாந்து பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
அர்ஜென்டினா - இங்கிலாந்து
FIFA உலகக்கிண்ணத் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் அர்ஜென்டினா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
அர்ஜென்டினா ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியை (Lionel Messi) சமாளித்து, வெற்றி பெறும் முனைப்பில் இங்கிலாந்து அணி உள்ளது.
தாமஸ் துச்செல்
இதுகுறித்து அந்த அணியின் பயிற்சியாளர் தாமஸ் துச்செல் (Thomas Tuchel) பேசியுள்ளார்.
மெஸ்ஸி குறித்து அவர் கூறுகையில், "மெஸ்ஸியை தடுப்பதற்கான அனைத்து வழிகளையும் கண்டுபிடித்து வருகிறோம். ஆட்டத்தின் போக்கை மாற்றும் வகையில் அவர் செயல்படுகிறார். அவரது நகர்வுகளை கவனித்து தயாராகி வருகிறோம்.
அவர்களின் ஆட்டத்தில் சில பணிகளை நாங்கள் கண்டறிந்துள்ளோம் என்று நினைக்கிறேன். ஆனால், அந்தப் பணிகளை மூடிவிட்டால், (மெஸ்ஸி) ஒருவேளை புதிய ஒன்றைக் கண்டுபிடித்து, புதிதாக ஒன்றை உருவாக்குவார். அதுதான் அவருடைய மிகப்பெரிய பலம்" என தெரிவித்துள்ளார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |