பென் ஸ்டோக்ஸ் தலைமையில் இங்கிலாந்து அணி சாதனை
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை 250 ரன்களுக்கு மேற்பட்ட இலக்கை சேஸ் செய்து பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி சாதனை படைத்துள்ளது.
அவுஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது.
இதில் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவிய இங்கிலாந்து அணி, மூன்றாவது ஆட்டத்தில் வெற்றி பெற்றது.
0-2 என பின்தங்கிய நிலையில், மூன்றாவது போட்டியில் ஹெட்டிங்லியில் இரு அணிகளும் மோதின.
இதில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து பந்துவீச முடிவெடுத்தது, இதன்படி முதல் இன்னிங்சிஸ் 263 ரன்களுக்கு ஆட்டமிழந்தது அவுஸ்திரேலியா.
தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து 237 ரன்களில் ஆட்டமிழந்தது, 26 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய அவுஸ்திரேலியா 224 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து, 254 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இதன்மூலம் டெஸ்ட் போட்டிகளில் அதிகமுறை 250 ரன்களுக்கு மேற்பட்ட இலக்கை சேஸ் செய்த அணி என்ற பெருமையை பெற்றுள்ளது.
இதற்கு முன் தோனி தலைமையிலான இந்திய அணி 4 முறை சேஸ் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |