அதிரடி சதம் மூலம் ஆஷஸில் சாதனை படைத்த வீரர்!
இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் மிட்செல் மார்ஷ் அதிரடியாக சதம் விளாசியதன் மூலம் சாதனை படைத்துள்ளார்.
மிட்செல் மார்ஷ் அதிரடி சதம்
இங்கிலாந்து அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது ஆஷஸ் டெஸ்ட் லீட்ஸில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சை ஆடிய அவுஸ்திரேலிய அணியில் 4 விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன.
அப்போது களமிறங்கிய மிட்செல் மார்ஷ் அதிரடியில் மிரட்டி அணியை மீட்டார். சிக்ஸர், பவுண்டரிகளை விளாசிய அவர் 102 பந்துகளில் சதம் விளாசினார்.
Reuters
சாதனை சதம்
இது அவருக்கு 3வது டெஸ்ட் போட்டி ஆகும். இதன்மூலம் இங்கிலாந்து மண்ணில் அதிவேகமாக சதம் விளாசிய இரண்டாவது அவுஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை மார்ஷ் படைத்தார்.
Getty Images
அதன் பின்னர் 118 பந்துகளில் 118 ஓட்டங்கள் (4 சிக்ஸர், 17 பவுண்டரிகள்) எடுத்து மார்ஷ் ஆட்டமிழந்தார். அவுஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் 263 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 68 ஓட்டங்கள் எடுத்தது.
Getty
இங்கிலாந்தில் அதிவேகமாக சதம் விளாசிய அவுஸ்திரேலிய வீரர்கள்:
- விக்டர் டிரம்பர் - 95 பந்துகள்
- மிட்செல் மார்ஷ் - 102 பந்துகள்
- கிலேம் ஹில் - 105 பந்துகள்
- டிராவிஸ் ஹெட் - 106 பந்துகள்
- ரிக்கி பாண்டிங் - 113 பந்துகள்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |