இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் சரியும் குழந்தை பிறப்பு விகிதம்: புதிய புள்ளிவிவரங்களில் அதிர்ச்சி
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் குழந்தைகள் பிறப்பு விகிதம் பெரும் சரிவை சந்தித்து இருப்பதாக புள்ளி விவரங்கள் அதிர்ச்சியளித்துள்ளது.
சரியும் குழந்தை பிறப்பு விகிதம்
இங்கிலாந்தின் தேசிய புள்ளியியல் அலுவலகம்(ONS) வெளியிட்ட சமீபத்திய தரவுகளில், இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் குழந்தைகள் பிறக்கும் விகிதமானது இதுவரை இல்லாத அளவு கடும் சரிவை சந்தித்து இருப்பதாக அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 50 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவானது.

பெண் தன்னுடைய வாழ்நாளில் பெற்றுக் கொள்ளும் சராசரி குழந்தைகளின் எண்ணிக்கை விகிதம் (அதாவது மொத்த கருவுறுதல் விகிதம்) 2025ம் ஆண்டு 1.39 ஆக சரிந்துள்ளது. இது கடந்த 2024ம் ஆண்டு 1.41 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் வெளிநாட்டு குடியேற்றம் இன்றி ஒரு நாட்டின் மக்கள் தொகையானது நிலைத்து இருக்க 2.1 என்ற கருவுறுதல் விகிதம் தேவைப்படும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள தரவுகள் இலக்கை விட மிக குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
பெற்றோர்களிடம் ஏற்பட்டுள்ள வித்தியாசம்
அதே சமயம், இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் பிறக்கும் குழந்தைகளின் பெற்றோர்களின் பின்னணியில் ஏற்பட்டுள்ள மாற்றம் கவனத்தை பெற்றுள்ளது.

அதாவது, இங்கிலாந்துக்கு வெளியே பிறந்த பெற்றோர்களிடம் இருந்து பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.
2025ம் ஆண்டு பிறந்த குழந்தைகளில் 40.2 % இங்கிலாந்திற்கு வெளியே பிறந்த தாய் அல்லது தந்தை ஒருவருக்கு பிறந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
இது கடந்த ஆண்டு 30.5% ஆக இருந்த நிலையில் இந்த ஆண்டு இது அதிகரித்துள்ளது.
கடந்த 4 ஆண்டுகளில் வெளிநாட்டில் பிறந்த தாய்மார்களில் இந்தியாவை சேர்ந்தவர்கள் முதலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |