உலக கோப்பை இறுதிப்போட்டியில் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடும் இங்கிலாந்து வீரர்கள்! காரணம் என்ன?
டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இங்கிலாந்து வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடுவதற்கான காரணம் வெளியாகியுள்ளது.
கையில் கருப்பு பட்டையுடன் இங்கிலாந்து வீரர்கள்
பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகள் மோதும் இறுதிப்போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இங்கிலாந்து அணி வீரர்கள் தங்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகிறார்கள்.
news24online
டேவிட் இங்கிலீஷுக்கு அஞ்சலி
இதற்கான காரணத்தை வர்ணணையாளர் நாசர் ஹுசேன் வெளியிட்டுள்ளார். அதன்படி இங்கிலாந்து கிரிக்கெட்டின் பிதாமகன் டேவிட் இங்கிலீஷ் நேற்று மாரடைப்பால் உயிரிழந்த நிலையில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கருப்பு பட்டையை இங்கிலாந்து அணி வீரர்கள் அணிந்துள்ளதாக தெரிவித்தார்.
So sad to hear the news of David English passing away. One of life’s great characters, so fun to spend time with and producer of some of the best English cricketers through his wonderful Bunbury Festivals. RIP ❤️ pic.twitter.com/RK3SXUOfSr
— Jos Buttler (@josbuttler) November 12, 2022
டேவிட் இங்கிலீஷ் மறைவிற்கு ஜோஸ் பட்லர் உள்ளிட்ட வீரர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.