பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்த இங்கிலாந்து அணி: தொடர் நாயகன் விருதுபெற்ற இருவர்
பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் இங்கிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
எட்ஜ்பாஸ்டனில் நடந்த டெஸ்டில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி, தொடரை முழுமையாக கைப்பற்றியது.
கடைசி டெஸ்ட்
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடந்தது.

பாகிஸ்தான் நிர்ணயித்த 130 ஓட்டங்கள் இலக்கினை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி 2 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது.
அதனைத் தொடர்ந்து கைகோர்த்த ஜோர்டன் காக்ஸ், ஜோ ரூட் கூட்டணி வெற்றிக்கு வித்திட்டது. இங்கிலாந்து அணி 24.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 130 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து
ஜோ ரூட் (Joe Root) 69 பந்துகளில் 62 ஓட்டங்களும், ஜோர்டன் காக்ஸ் (Jordan Cox) 59 ஓட்டங்களும் எடுத்தனர்.
மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இங்கிலாந்தின் ஓலி ராபின்ஸன் மற்றும் பாகிஸ்தானின் மொஹம்மது அப்பாஸ் இருவரும் தொடர் நாயகன் விருது பெற்றார்கள்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |