இறுகும் H-1B விசா விதிகள்... ட்ரம்ப் நிர்வாகம் புதிய ஆணை: விரிவான பின்னணி
மிகவும் திறமையான தொழிலாளர்களுக்கான H-1B விசா விதிகளை மிகவும் கடுமையாக்கும் புதிய ஆணையை ட்ரம்ப் நிர்வாகம் புதன்கிழமை அறிவித்தது.
மதிப்பாய்வு செய்ய
இதில், பேச்சு சுதந்திரத்தை முடக்குவதில் ஈடுபடும் எவரும் H-1B விசா நிராகரிக்கப்படுவதற்கு பரிசீலிக்கப்படுவார்கள் என்று வெளிவிவகாரத்துறையின் ரகசிய குறிப்பு ஒன்றும் கசிந்துள்ளது.

அமெரிக்க பெருநிறுவனங்கள் பல சிறப்புத் துறைகளில் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்த அனுமதிக்கும் H-1B விசாக்கள், இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்து அதிக அளவில் ஆட்களை நியமிக்கும் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மிக முக்கியமானவை.
இப்படியான நிறுவனங்களின் தலைவர்கள் பலர், தங்களுக்கு சாதகமான ஆட்சி நீடிக்கும் என்ற கோக்கில் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ட்ரம்பிற்கு தங்கள் ஆதரவை அளித்தனர். ஆனால், தற்போது ட்ரம்ப் நிர்வாகம் H-1B விசா மீதான விதிகளைக் கடுமையாக்க முடிவு செய்துள்ளது.
டிசம்பர் 2 ஆம் திகதி வெளிவிவகார அலுவலகம் அனுப்பிய ஆணையில், H-1B விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் அல்லது LinkedIn சுயவிவரங்களை மதிப்பாய்வு செய்யக் கோரப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, H-1B விசாதாரர்களுடன் பயணிக்கும் குடும்ப உறுப்பினர்களில் எவரேனும் தவறான தகவல், தகவல்களை மதிப்பீட்டு செய்தல், உண்மை சரிபார்ப்பு, ஒன்லைன் பாதுகாப்பு போன்ற செயல்பாடுகளை உள்ளடக்கிய பகுதிகளில் அவர்கள் பணியாற்றியிருந்தாலும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கொள்கைகளுக்கு எதிராக செயல்படக் கூடியவர் என ஒருவர் அடையாளம் காணப்பட்டால், அவரது H-1B விசா விண்ணப்பத்தை நிராகரிக்கலாம்.

H-1B விசா விண்ணப்பதாரர்களில் தணிக்கை மற்றும் பேச்சு சுதந்திரம் உள்ளிட்டவை தொடர்பில் இதற்கு முன்பு மதிப்பீடு செய்யப்படவில்லை. மேலும், அத்தகைய நடவடிக்கைகளில் பங்கேற்காமல் இருப்பதை உறுதிசெய்ய, அவர்களின் வேலைவாய்ப்பு வரலாறுகளை முழுமையாக ஆராய வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
கருத்தியலை திணிக்கும்
புதிய விதிகள் புதிதாக விண்ணப்பிக்கும் மற்றும் தொடர்ச்சியாக விண்ணப்பிப்பவர்கள் என இருவருக்கும் பொருந்தும். இந்த நிலையில், வெளிவிவகாரத்துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவிக்கையில்,
அமெரிக்கர்களை குழப்பி உங்கள் கருத்தியலை திணிக்கும் நபர்களாக அமெரிக்காவிற்கு வரும் எவரையும் இனி நாங்கள் ஆதரிப்பதாக இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னர் பேச்சு சுதந்திரத்தை முடக்கும் செயலை ட்ரம்பின் மீதும் முன்னெடுக்கப்பட்டது. அவரது சமூக ஊடகம் முடக்கப்பட்டது. அப்படியான ஒரு சூழல் இனி அமெரிக்க மக்களுக்கு வேண்டாம் என்றே ட்ரம்ப் முடிவெடுத்துள்ளார் என குறித்த செய்தித்தொடர்பாளர் விளக்கமளித்துள்ளார்.

கடந்த மே மாதத்தில், சமூக ஊடகங்கள் உட்பட அமெரிக்கர்களின் பேச்சு சுதந்திரத்தைத் தணிக்கை செய்பவர்களுக்கு விசா தடை விதிக்கப்படும் என்று ரூபியோ அச்சுறுத்தி இருந்தார்,
மேலும் இந்தக் கொள்கை அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் வெளிநாட்டு அதிகாரிகளை குறிவைக்கலாம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |