மூன்று மாதங்களுக்குள்... வடகொரியா அனுப்பிய 12,000 வீரர்களும்: அதிர்ச்சி பின்னணி
குறைந்து வரும் விளாடிமிர் புடினின் படைகளை வலுப்படுத்த வட கொரியா அனுப்பிய 12,000 வீரர்களும் அடுத்த மூன்று மாதங்களில் கொல்லப்படலாம் அல்லது காயமடையக்கூடும் என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
12 வாரங்களுக்குள்
ISW என்ற போர் தொடர்பிலான ஆய்வு மையமானது பிப்ரவரி 2022ல் தொடங்கி உக்ரைன் மீதான படையெடுப்பின் களநிலவரங்களைக் கண்காணித்து வருகிறது.
இந்த அமைப்பு வெளியிட்டுள்ள சமீபத்திய ஆய்வறிக்கையில், ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள வட கொரிய இராணுவத்தின் முழுப் பிரிவும் சுமார் 12 வாரங்களுக்குள் கொல்லப்படலாம் அல்லது காயமடையலாம் என குறிப்பிட்டுள்ளது.
ஜனவரி தொடக்கத்தில், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவிக்கையில், குர்ஸ்கில் இதுவரை 3,800 வட கொரிய வீரர்கள் கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்துள்ளனர் என்று கூறினார்.
கடந்த நவம்பர் தொடக்கத்தில் குர்ஸ்கில் வடகொரிய வீரர்கள் களமிறக்கப்பட்டனர். தொடர்ந்து டிசம்பர் மாதம் குர்ஸ்கில் உக்கிரமான போர் முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிலையில், ISW வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், வட கொரிய படைப்பிரிவு ஒரு நாளைக்கு சுமார் 92 வீரர்களை இழந்து வருகிறது, மேலும் அவர்கள் எதிர்வரும் நாட்களில் இதேபோன்ற அதிக உயிரிழப்பு விகிதங்களை தொடர்ந்து சந்தித்தால் ஏப்ரல் நடுப்பகுதியில் முற்றிலுமாக அழிக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
எண்ணிக்கை அதிகரிப்பதாக
மேலும், வட கொரியப் படைகளில் போரில் காயமடைந்தவர்களை விட கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாக கூறப்படுகிறது. மட்டுமின்றி, குர்ஸ்கில் உக்ரைன் ராணுவம் முழு வீச்சில் போரிட்டு வருகிறது.
இதனால் ரஷ்யா மற்றும் வடகொரியா தரப்பில் அதிக இழப்புகளை எதிர்கொள்ளும் நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது என அந்த ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும், விரிவான திட்டத்துடன் குர்ஸ்கில் உக்ரைன் ராணுவம் செயல்பட்டு வருவதால், வடகொரிய துருப்புகள் திணறுவதாகவும் கூறப்படுகிறது.
உக்ரேனிய காலாட்படை படைப்பிரிவுத் தலைவர் ஒருவர் தெரிவிக்கையில், ரஷ்யர்கள் இந்தப் பிரதேசத்தை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் தங்கள் முழு பலத்தையும் இதில் செலுத்துகிறார்கள்,
அதே நேரத்தில் குர்க்ஸ் பகுதியை தக்க வைத்திருக்க நம்மிடம் உள்ள அனைத்தையும் முன்னெடுக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |