இஸ்ரேலியர்கள் மாலத்தீவுக்குள் நுழையத் தடை: போரின் எதிரொலியாக எடுக்கப்பட்ட முக்கிய முடிவு
மாலத்தீவு அரசாங்கம், இஸ்ரேல் நாட்டு மக்கள் தங்கள் நாட்டிற்குள் நுழைவதை தடை செய்யும் முடிவை எடுத்துள்ளது. ஏற்கனவே அங்குள்ள இஸ்ரேலியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவு, 8 மாதங்களாக நீடித்து வரும் இஸ்ரேல்-பாலஸ்தீனம் போருக்கு எதிரான மாலத்தீவின் முதல் வெளிப்படையான எதிர்ப்பு ஆகும்.
மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, இந்தியாவுக்கு எதிராகவும், சீனாவுக்கு ஆதரவாகவும் பல முடிவுகளை எடுத்தது போல, தற்போது இஸ்ரேலுக்கு எதிராகவும் முடிவுகளை எடுத்து வருகிறார்.
மாலத்தீவு அரசாங்கத்தின் இந்த முடிவுக்கு சில உலக நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், சில நாடுகள், இஸ்ரேல் செய்யும் செயல்களுக்கு இஸ்ரேல் மக்கள் என்ன செய்வார்கள் என்ற கேள்வியை எழுப்பியுள்ளன.
இந்த முடிவு தொடர்பாக இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம், மாலத்தீவில் உள்ள இஸ்ரேலியர்கள் சிக்கலை எதிர்கொள்ளலாம் என்றும், அவர்களுக்கு உதவுவது கடினமாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளது. மேலும், இஸ்ரேலியர்கள் வேறு எந்த நாட்டில் இரண்டாவது பாஸ்போர்ட் வைத்திருந்தாலும் கூட மாலத்தீவுக்கு வருவதை தடை செய்யும் சட்டத்தை கொண்டு வர அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
இந்த சூழ்நிலை, இஸ்ரேல்-பாலஸ்தீனம் போர் மற்றும் சர்வதேச உறவுகளில் பல சிக்கல்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |