இன்னும் ஒரு மாதத்திற்குள் அனைவரும் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாவிட்டால்... எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்க மருத்துவர்
இன்னும் ஒரு மாதத்திற்குள் அமெரிக்கர்கள் அனைவரும் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாவிட்டால், டெல்டா வகை கொரோனா வைரஸ் அமெரிக்கா முழுவதும் பரவிவிடும் என எச்சரித்துள்ளார் அமெரிக்க மருத்துவர் ஒருவர்.
உலகின் பல நாடுகளும் இப்போது டெல்டா வகை திடீர் மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் குறித்து கவலையடைந்துள்ளன. எளிதில் பரவக்கூடிய இந்த வைரஸ், முதலில் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது.
தற்போது அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களில் குறைந்தது 20 சதவிகிதம் பேர் இந்த டெல்டா வகை கொரோனா வைரஸால்தான் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்நிலையில், இன்னும் சில வாரங்களில் இந்த டெல்டா வகை கொரோனா வைரஸ் பெரும்பான்மை பெற்றுவிடும் என அறிவியலாளர்கள் கருதுகிறார்கள்.
ஜூலை 4ஆம் திகதிக்குள் அமெரிக்கா முழுமைக்கும் தடுப்பூசி அளித்துவிடவேண்டும் என்ற அதிபர் ஜோ பைடனின் திட்டம் எதிர்பார்த்தபடி நிறைவேறுமா என்பது சந்தேகமாகவே உள்ளது.
இப்படிப்பட்ட ஒரு சூழலில்தான், தொற்றுநோயியல் நிபுணரான Eric Feigl-Ding, அமெரிக்கா முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொள்ள ஒரு மாதம் மட்டுமே உள்ளது, அப்படி நடக்கவில்லையென்றால், டெல்டா வகை கொரோனா வைரஸ் முழுமையாக பரவிவிடும்.
அதை மட்டுப்படுத்தவும், தடுப்பூசி செலுத்தவும் ஒரு மாதம் மட்டுமே உள்ளது என எச்சரித்துள்ளார்.