Designer Baby சாம்ராஜ்யத்தை உருவாக்கத் திட்டமிட்ட எப்ஸ்டீன்: புதிய ஆவணங்களில் சிக்கிய தகவல்
விவாத்திற்குரிய விஞ்ஞானிகளுடன் இணைந்து மனித குளோன் மற்றும் தெரிவு செய்யப்பட்ட அம்சங்களுடனான குழந்தைகளையும் உருவாக்க எப்ஸ்டீன் திட்டமிட்டிருந்ததாக புதிய ஆவணங்களில் அம்பலமாகியுள்ளது.
எப்ஸ்டீனிடம் நிதியுதவி
அமெரிக்க நீதித்துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட எப்ஸ்டீன் ஆவணங்களின் புதிய தொகுப்பில், எப்ஸ்டீனுக்கும் பிரையன் பிஷப்புக்கும் இடையிலான மின்னஞ்சல்கள் அடங்கியுள்ளன.

இந்த பிரையன் பிஷப் கடந்த 2018ல் designer baby என மரபணு ரீதியாக சந்ததிகளை மேம்படுத்துவதையும், இறுதியில் மனிதர்களைப் பிரதி எடுப்பதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு முயற்சிக்கு நிதி உதவியை நாடியிருந்தார்.
2018 ஜூலை மாதம் தமது இந்த நோக்கத்திற்காக எப்ஸ்டீனிடம் நிதியுதவி கோரி மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். ஆனால், நிதியுதவி அளிக்க தாம் தயார் என்றும், நான் தலைமை தாங்குவது போல் தெரிந்தால் மட்டுமே அதற்கு சாத்தியம் என்றும் எப்ஸ்டீன் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, வருடத்திற்கு 1.7 மில்லியன் டொலர் என 5 வருடங்களுக்கு நிதியுதவி கோரியதுடன், ஆய்கத்திற்காக 1 மில்லியன் டொலரும் கோரியிருந்தார். மொத்தமாக 9.5 மில்லியன் டொலர் தொகையை இந்த திட்டத்திற்காக பிரையன் பிஷப் கோரியிருந்தார்.
இந்த நிலையில், அமெரிக்க விர்ஜின் தீவுகளில் உள்ள சட்டத்தரணிகள் 2020 ஆம் ஆண்டில் ஜெஃப்ரி எப்ஸ்டீனின் எஸ்டேட்டுக்கு எதிராக ஒரு வழக்கைத் தாக்கல் செய்தனர்.
அதில், இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக, எப்ஸ்டீன் இளம் பெண்களையும் சிறுமிகளையும் தனது தனிப்பட்ட கரீபியன் தீவுகளுக்குக் கடத்துவதற்காக ஒரு விரிவான சதியை அரங்கேற்றினார் என குறிப்பிட்டிருந்தனர்.
எப்ஸ்டீன் அவர்களை ஹெலிகொப்டர் மற்றும் படகுகள் மூலம் அழைத்துச் சென்றதாகவும், அங்கு அவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளானதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்; பாதிக்கப்பட்டவர்களில் சிலர் 11 வயதுடையவர்கள் என்றும் கூறப்படுகிறது.
13 மாதங்கள் தண்டனை
எப்ஸ்டீன் பிஷப்புடன் கடிதப் பரிமாற்றம் செய்து கொண்டிருந்த காலகட்டத்துடன், 2018 ஆம் ஆண்டு வரை, சில சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்ந்ததாக நீதிமன்றத் தாக்கல்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இருப்பினும், எப்ஸ்டீன் முதன்முதலில் 2008 ஆம் ஆண்டில், புளோரிடாவில் ஒரு சிறுமியை விபச்சாரத்தில் ஈடுபடுவதற்காக ஏற்பாடு செய்த குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டார்.

இதில், அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார் மற்றும் வேலைக்குச் செல்லும் அனுமதியுடன் ஒரு மாவட்டச் சிறையில் சுமார் 13 மாதங்கள் தண்டனை அனுபவித்தார்.
இந்த நிலையில், எப்ஸ்டீனிடம் இருந்து தாங்கள் நிதியுதவி எதுவும் பெற்றுக்கொள்ளவில்லை, அதில் பெருமை கொள்கிறோம் என பிரையன் பிஷப் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |