ரஷ்யா பெண்களுடனான தொடர்பால் பில்கேட்ஸ்க்கு நோய்? எப்ஸ்டீன் ஆவணங்களில் அதிர்ச்சி தகவல்
ரஷ்யா பெண்களுடனான தொடர்பால் பில்கேட்ஸ்க்கு STD நோய் இருந்ததாக எப்ஸ்டீன் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எப்ஸ்டீன் ஆவணங்கள்
எப்ஸ்டீன் ஆவணங்களில், 3 மில்லியனுக்கும் அதிகமான பக்க ஆவணங்களையும், 2,000 க்கும் மேற்பட்ட வீடியோக்களையும், 180,000 படங்களும் வெளியாகியுள்ளது.

இந்த ஆவணங்களில், ரஷ்யா பெண்களுடனான தொடர்பால் பில்கேட்ஸ்க்கு ஏற்பட்ட நோய், எலோன் மஸ்க் எப்ஸ்டீனின் தீவுக்கு வர விரும்பியது உள்ளிட்ட கோப்புகளும் இடம் பெற்றுள்ளது.
பில்கேட்ஸ்க்கு நோய்?
2013 ஆம் ஆண்டில் ஜூலை மாதத்தில் எப்ஸ்டீன் ஈமெயிலில் உள்ள தகவல்களில், பில்கேட்ஸ் ரஷ்யா பெண்களுடன் உறவு கொண்டதால் ஏற்பட்ட பால்வினை நோய்க்கு (STD) மருந்துகளை பெற உதவியதாகவும், இதனை தனது மனைவி மெலிண்டாவிற்கு தெரியாமல் பெற கேட்ஸ் முயற்சித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், STD தொடர்பான மின்னஞ்சல்களை நீக்குமாறு பில்கேட்ஸ் மன்றாடியதாகவும், தங்களது 6 வருட நட்பை முறித்து கொண்டது அதிர்ச்சியளிப்பதாகவும், பில்கேட்ஸ் மெலிண்டா இடையேயான திருமண தகராறில் தான் சிக்கிக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
Newly released Epstein files allege Bill Gates asked Jeffrey Epstein for “antibiotics” for his wife, Melinda, with the documents claiming it followed an STD he reportedly contracted from “Russian girls.” pic.twitter.com/Ei8uf8GzlA
— Breaking911 (@Breaking911) January 30, 2026
பில்கேட்ஸின் செய்தி தொடர்பாளர் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். மேலும், எப்ஸ்டீன் உடனான உறவை முறித்து கொண்டதால், ஏற்பட்ட விரக்தியில் பில்கேட்ஸை சிக்க வைக்க அவதூறு பரப்பியுள்ளார் என தெரிவித்துள்ளார்.

எப்ஸ்டீன் உடனான தொடர்பும் பில்கேட்ஸை பிரிவதற்கு முக்கிய காரணம் என அவரது முன்னாள் மனைவி மெலிண்டா குறிப்பிட்டிருந்தார்.
மேலும், எலோன் மஸ்க் கடந்த 2013 ஆம் ஆண்டில் எப்ஸ்டீனின் தீவுக்கு வருவது குறித்து விசாரித்ததாகவும் ஆவணங்களில் இடம்பெற்றுள்ளது.

எப்ஸ்டீனுடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என முன்னதாகவே எலோன் மஸ்க் மறுத்துள்ளார். சமீபத்திய குற்றச்சாட்டுகள் குறித்து அவர் பதிலளிக்கவில்லை.
அமெரிக்காவை சேர்ந்த பெரும் பணக்காரரான ஜெஃப்ரி எப்ஸ்டீன் மீது, இளம் சிறுமிகளை தனது தீவுக்கு கடத்தி முக்கிய புள்ளிகளுடன் கட்டாயப்படுத்தி, பாலியல் தேவைக்காக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட எப்ஸ்டீன், கடந்த 2019 ஆம் ஆண்டு சிறையில் உயிரிழந்தார். அவரின் மரணத்தில் மர்மம் உள்ளதாக பலரும் கருதுகின்றனர். எப்ஸ்டீன் வழக்கு தொடர்பான ஆவணங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |