எப்ஸ்டீனால் தனி விமானத்தில் பெண்கள் பிரித்தானியாவிற்கு கடத்தப்பட்டார்களா... பொலிஸார் விசாரணை
அண்ட்ரூவிற்கு அடுத்த நெருக்கடியாக, பிரித்தானியாவில் எப்ஸ்டீனின் செயற்பாடுகள் தொடர்பில் பொலிசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
பெண்களை கடத்தியதாக
எப்ஸ்டீன் கோப்புகளை வெளியிட்டதில் வெளிப்பட்ட குற்றச்சாட்டுகளை ஆய்வு செய்து வருவதை எசெக்ஸ் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. இதனால், எப்ஸ்டீன் விவகாரத்தில் இதுவரை நான்கு விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

எப்ஸ்டீன், ஸ்டான்ஸ்டெட் விமான நிலையம் வழியாக தனி விமானங்கள் மூலம் பிரித்தானியாவுக்கு பெண்களை கடத்தியதாகக் கூறும் அதிர்ச்சியூட்டும் தகவலிலிருந்து வெளிவந்த தகவல்களை அதிகாரிகள் மதிப்பிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது ஆண்ட்ரூவிற்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்றே கூறப்படுகிறது. 1990கள் மற்றும் 2018க்கு இடையில், எப்ஸ்டீனின் Lolita Express என்று அழைக்கப்படும் விமானம், இங்கிலாந்து விமான நிலையங்களில் 90 முறை வரை தரையிறங்கியதாகவோ அல்லது புறப்பட்டதாகவோ விமானப் பதிவுகள் காட்டுகின்றன.
2010 ஆம் ஆண்டு விண்ட்சரில் உள்ள வீட்டில் ஆண்ட்ரூவுக்கு என எப்ஸ்டீன் ஒரு இளம் பெண்ணை இங்கிலாந்துக்கு அனுப்பியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை பொலிசார் ஏற்கனவே விசாரணை செய்து வருகின்றனர்.
மட்டுமின்றி, பிரித்தானியாவிற்கான வர்த்தக தூதராக இருந்தபோது ரகசிய அறிக்கைகளை கசியவிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக, தவறான நடத்தை குற்றத்திற்காக ஆண்ட்ரூ விசாரிக்கப்பட வேண்டுமா இல்லையா என்பதையும் பொலிசார் ஆராய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எப்ஸ்டீனுக்கு கசியவிட்டு
கடந்த ஆண்டு எப்ஸ்டீனுடனான தொடர்புகள் காரணமாக எஞ்சியுள்ள அரச பட்டங்களும் ஆண்ட்ரூவிடம் இருந்து பறிக்கப்பட்டன. 2001 முதல் 2011 வரை சர்வதேச வர்த்தகம் மற்றும் முதலீட்டிற்கான இங்கிலாந்தின் சிறப்பு பிரதிநிதியாக ஆண்ட்ரூ பொறுப்பில் இருந்தார்.
இந்தப் பொறுப்பு, பொதுமக்கள் வரிப்பணத்தில் உலகம் முழுவதும் பயணம் செய்ய அவருக்கு அனுமதித்தது, மேலும் மூத்த அரசியல் மற்றும் வணிகப் பிரமுகர்களைச் சந்திக்க அவருக்கு வாய்ப்பாக அமைந்தது.

அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ள கோப்புகளில், முக்கியமான தரவுகளை ஆண்ட்ரூ எப்ஸ்டீனுக்கு கசியவிட்டுள்ளதாகவே வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஆண்ட்ரூவுக்கு எதிரான கோப்புகளில் காணப்படும் துஷ்பிரயோக குற்றச்சாட்டு தொடர்பாக, சர்ரே காவல்துறை திருத்தப்படாத கோப்புகளைத் தேடி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |