ஈக்விட்டி பங்குகள்... முழுமையான தகவல்
பொதுவாக ஒரு நிறுவனம் நீண்ட கால நிதியுதவிக்காக அல்லது நிறுவனத்தின் உரிமையை முதலீட்டாளர்களுடன் பகிர்ந்துகொள்ள முடிவெடுக்கும் போது பொதுமக்களுக்கு வழங்கும் பங்குகளை ஈக்விட்டி பங்குகள் என அழைக்கிறார்கள்.
நீண்டகால நிதி ஆதாரம்
ஈக்விட்டி பங்குகளை வைத்திருக்கும் முதலீட்டாளர்கள் அந்த நிறுவனத்தின் மொத்த முதலீட்டுக்கு பங்களித்து பங்குதாரர்களாக மாறுகிறார்கள். ஈக்விட்டி பங்குகள் ஒரு நிறுவனத்தின் நீண்டகால நிதி ஆதாரமாகவே பார்க்கப்படுகிறது.
இதனால் ஈக்விட்டி பங்குகளின் முதலீட்டாளர்களுக்கு நிறுவனம் தொடர்பாக வாக்களிக்கவும், லாபங்களை பகிர்ந்து கொள்ளவும், ஒரு நபரிடம் இருந்து இன்னொருவருக்கு மாற்றவும் முடியும்.
முதலீடு செய்த நிறுவனம் அதிக லாபம் ஈட்டும்போது ஈக்விட்டி முதலீட்டாளர்களுக்கு ஈவுத்தொகை விகிதம் அதிகமாக இருக்கும். அதிக எண்ணிக்கையிலான ஈக்விட்டி பங்கு வைத்திருப்பவர்கள், நிறுவனத்தின் நிர்வாகத்தைக் கட்டுப்படுத்தவும் உரிமை உண்டு.
ஈக்விட்டி பங்குகளில் பல வகைகள் உள்ளது. அதில் சாதாரண பங்குகள் என்பது, ஒரு நிறுவனம் தங்கள் நீண்ட கால செலவுகளுக்காக நிதி திரட்ட வெளியிடப்படும் பங்குகள். ஒரு முதலீட்டாளர் வைத்திருக்கும் பங்குகளின் எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டு அந்த நிறுவன முடிவுகளில் வாக்களிக்கும் உரிமையும் பெறுகிறார்கள்.
முன்னுரிமைப் பங்குகள்: இதில் சாதாரண பங்கு வைத்திருப்பவர்களுக்கு முன்பாக முதலீட்டாளர்களுக்கு ஒட்டுமொத்த ஈவுத்தொகையை வழங்குவதை உறுதி செய்கின்றன. ஆனால் இவர்களுக்கு வாக்களிப்பு மற்றும் உறுப்பினர் உரிமைகள் இல்லை.
விலை நகர்வுகள் கடுமை
மூன்றாவதாக போனஸ் பங்குகள்: ஒரு நிறுவனம் அதன் லாபத்தை போனஸ் பங்குகளாக விநியோகிக்கிறது. அதாவது ஒரு நிறுவனம் அதன் வருவாயில் இருந்து வெளியிடும் ஈக்விட்டி பங்குகள்.
இன்னொன்று ஸ்வெட் ஈக்விட்டி: ஒரு நிறுவனம் சிறப்பாக செயல்படும் ஊழியர்களுக்கு அல்லது குறிப்பிடத்தக்க சாதனை புரிந்தவர்களுக்கு அளிக்கப்படும் மிக குறைந்த விலையிலான பங்குகள். ஈக்விட்டி பங்குகள் என்பது நிரந்தர சொத்துக்கள் என்பதால், அந்த நிறுவனம் கலைக்கப்படும் போது மட்டுமே அதை திரும்பப் பெற முடியும்.
மேலும், ஈக்விட்டி பங்குகள் சந்தை சார்ந்த அபாயத்தையும் கொண்டுள்ளது. விலை நகர்வுகள் கடுமையாக இருக்கும். ஈக்விட்டி பங்குகளுடன், பங்குதாரர்கள் நிறுவனத்தின் லாபத்தை ஈவுத்தொகை மற்றும் போனஸ் மூலம் பகிர்ந்து கொள்கின்றனர்.
ஆனால் அந்த நிறுவனம் கணிசமான லாபம் மற்றும் உபரி வருவாயை ஈட்டவில்லை என்றால் ஈவுத்தொகை அளிக்க தேவையில்லை என்ற முடிவுக்கும் வரலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |