மொத்தம் 24 பெரும் கோடீஸ்வரர்கள்... உலக வரிசையில் 22வது இடத்தில் இருக்கும் குட்டி நாடு
பெரும் கோடீஸ்வரர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மொத்தம் 24 பெரும் கோடீஸ்வரர்களுடன் உலகில் 22வது இடத்தில் உள்ளது ஐக்கிய அரபு அமீரகம்.
3,279 என அதிகரித்துள்ளது
அதிக எண்ணிக்கையிலான பெரும் கோடீஸ்வரர்கள் வசிக்கும் நகரங்கள் வரிசையில் துபாய் 28வது இடத்தில் உள்ளது. இங்கு 21 பெரும் கோடீஸ்வரர்கள் வசித்து வருகின்றனர்.
உலகில் பெரும் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டை விடவும் 2024ல் அதிகரித்துள்ளதாகவே Hurun Global பதிவு செய்துள்ளது. 2023ல் பெரும் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை 3,112 என இருந்த நிலையில், தற்போது 3,279 என அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
மொத்தம் 73 நாடுகளில் 2,435 நிறுவனங்களில் இவர்கள் செயல்படுகின்றனர் என்றும் Hurun Global பதிவு செய்துள்ளது. பெரும் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை 5 சதவிகிதம் அதிகரித்துள்ளதுடன், அவர்களின் சொத்து மதிப்பும் 9 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
Hurun Global வெளியிட்டுள்ள தரவுகளில், சீனாவில் மட்டும் 814 பெரும் கோடீஸ்வரர்கள் வசிக்கின்றனர். சீனாவில் இருந்து பல நாடுகளுக்கு 155 பெரும் கோடீஸ்வரர்கள் குடிபெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் 800 பெரும் கோடீஸ்வரர்கள் உள்ளனர். இதில் 109 பேர்கள் புதிதாக இணைந்துள்ளனர். 271 பெரும் கோடீஸ்வரர்களுடன் மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது. ஒரே ஆண்டில் 84 பெரும் கோடீஸ்வரர்கள் புதிதாக பட்டியலில் இணைந்துள்ளனர்.
பிரித்தானியாவில் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் பெரும் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்துள்ளது. நான்காவது இடத்தில் இருக்கும் பிரித்தானியாவில் 146 பெரும் கோடீஸ்வரர்கள் உள்ளனர்.
1.5 ட்ரில்லியன் அமெரிக்க டொலர்
ஜேர்மனியில் 140 பெரும் கோடீஸ்வரர்கள், 106 பெரும் கோடீஸ்வரர்களுடன் சுவிட்சர்லாந்து 6வது இடத்தில் உள்ளது. 76 பேர்களுடன் ரஷ்யா 7வது இடம், 69 பேர்களுடன் இத்தாலி 8வது இடம், 68 பேர்களுடன் பிரான்ஸ் 9வது இடம், 64 பேர்களுடன் பிரேசில் 10வது இடம்.
11 முதல் 21வது இடத்தில் கனடா, தாய்லாந்து, இந்தோனேசியா, அவுஸ்திரேலியா, ஜப்பான், சிங்கப்பூர், தென் கொரியா, இஸ்ரேல், ஸ்பெயின், ஸ்வீடன் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் உள்ளன.
முதலிடத்தில் இருக்கும் 10 பெரும் கோடீஸ்வரர்களின் சொத்துக்களின் மதிப்பு 426 பில்லியன் அமெரிக்க டொலர் அதிகரித்து, மொத்தம் 1.5 ட்ரில்லியன் அமெரிக்க டொலர் என்றே தெரிய வந்துள்ளது.
இந்த 10 பேர்களில் 8 பேர் அமெரிக்க நாட்டவர்கள், எஞ்சிய இருவர் பிரான்ஸ் மற்றும் இந்தியர். உலகின் பெரும் கோடீஸ்வரர் பட்டியலில் முதலிடத்தில் 231 பில்லியன் டொலர்களுடன் Elon Musk உள்ளார். 185 பில்லியன் டொலர் சொத்துக்களுடன் இரண்டாவது இடத்தில் Jeff Bezos உள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |