கிரீமியா உக்ரைனுக்கு சொந்தம்! துருக்கிய ஜனாதிபதி எர்டோகன் உறுதி! ஜெலென்ஸ்கி அறிவிப்பு
கிரீமியா உக்ரைனுக்கு சொந்தமானது என துருக்கி ஜனாதிபதி எர்டோகன் உறுதியளித்ததாக ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
கிரீமியா உக்ரைனுக்கு சொந்தமானது!
துருக்கிக்கு சென்றிருந்த உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, துருக்கிய அதிபர் ரெசெப் தையிப் எர்டோகனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த சந்திப்பின் முக்கிய அம்சமாக, கிரீமியாவை உக்ரைனின் பிராந்தியமாக துருக்கி அங்கீகரிப்பதாக ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.
மேலும், அங்காராவில் நடைபெற்ற சந்திப்பின்போது, துருக்கிய அதிபர் எர்டோகனுக்கு ஜெலென்ஸ்கி தனது நன்றியை தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் முக்கியத்துவம் குறித்து பேசிய ஜெலென்ஸ்கி, கிரீமியாவை உக்ரைனின் நிலப்பகுதியாக எர்டோகன் அங்கீகரித்தது ஒரு "மிக முக்கியமான சமிக்ஞை மற்றும் அரசியல் ஆதரவின் அடையாளம்" என்று குறிப்பிட்டார்.
2014 ஆம் ஆண்டு ரஷ்யாவால் சட்டவிரோதமாக இணைக்கப்பட்ட கிரீமிய தீபகற்பம், உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான போரில் ஒரு முக்கிய பிரச்சினையாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |