3D -ல் அலங்கரிக்கப்பட்ட திருமண உடை.., இந்திய வம்சாவளி பில்லியனரின் வியப்பான திருமணம்
இந்திய வம்சாவளி பில்லியனரான அங்கூர் ஜெயின் (Ankur Jain) திருமணத்தில் அவரது மனைவி எரிகா அணிந்திருந்த 3D உடைதான் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
திருமணம்
'பில்ட் ரிவார்ட்ஸ்’ நிறுவனத்தின் நிறுவனராகவும், தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இருப்பவர் அங்கூர் ஜெயின் (Ankur Jain). இவர், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆவார்.
இவருக்கும் WWE மல்யுத்த வீராங்கனை எரிகா ஹம்மண்ட் (Erika Hammond) என்பவருக்கும் கடந்த 26 -ம் திகதி எகிப்தில் திருமணம் நடைபெற்றது.
உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னியிலையில் இவர்கள் தங்களது திருமண உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர். அதோடு, திருமணப் புகைப்படங்களைப் பகிர்ந்து தன்னை வாழ்த்தியவர்களுக்கு அங்கூர் நன்றி தெரிவித்துள்ளார்.
3D -ல் திருமண உடை
இவர்களின் திருமணமானது தற்போது பேசுபொருளாக மாறியதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் எரிகா அணிந்திருந்த 3D உடை தான்.
இவர் தனது திருமணத்திற்காக வெள்ளை நிற திருமண கவுன்களைத் தவிர்த்துவிட்டு 3டி-யில் செய்யப்பட்ட கவுனை தேர்வு செய்துள்ளார். அதாவது, கவுன் முழுவதும் இருந்த தங்க மலர்கள் 3டி-யில் செய்யப்பட்டு இருந்தது.
அவர், ஹார்ட் நெக்லைன் மற்றும் உடலுடன் ஒட்டிய தங்க நிறமுள்ள ஸ்ட்ராப்லெஸ் கவுனை அணிந்திருந்தது இன்னும் சிறப்பாக்கியது.
குறிப்பாக மயில் என்ற தீமில் வடிவமைக்கப்பட்ட இந்த ஆடையில் 3டி ஷிம்மர்களும் இருந்தது கவரும்படி அமைந்தது.
அதுமட்டுமல்லாமல், திருமணத்திற்கு பிறகு நடைபெற்ற பார்ட்டி என அனைத்திற்கும் வைர நகைகளை எரிகா அணிந்துள்ளார். இந்த நகைகளை செய்ய இரண்டு மாதங்கள் ஆகியிருக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |