இணைய வசதி இல்லாத உலகின் ஒரே நாடு - எங்கே தெரியுமா?
AI ஆதிக்கம் செலுத்தி வரும் டிஜிட்டல் யுகத்தில் இணையதளம் சில நொடிகள் முடங்கினாலும், பெரியளவில் பாதிப்பு ஏற்படுகிறது.
அந்த அளவிற்கு மக்கள், உரையாடல் தொடங்கி அலுவலக பணி, பணப்பரிவர்த்தனை என அனைத்திற்கும் இணையத்தை சார்ந்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால் இந்த டிஜிட்டல் யுகத்திலும், ஒரு நாடு தற்போது வரை இணைய வசதி இல்லாமல் உள்ளது.
எரித்திரியா
கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள எரித்திரியா நாட்டில் தான் தற்போது வரை இணைய வசதி இல்லாமல் உள்ளது. இந்த நாட்டில், மொபைல் பிராட்பேண்ட் உள்ளிட்ட எந்த இணைய வசதியும் கிடையாது.
நகரங்களில் உள்ள சில கஃபேக்களில் மட்டுமே wifi இணைய வசதி உள்ளது. அதனை அந்த நாட்டின் மக்கள் தொகையில் ஒரு சதவீதத்திற்கு குறைவானவர்களே பயன்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
அதுவும் 2G க்கு குறைவான இணைய வேகமே கிடைக்கும். காரணம் ஏழ்மை நாடான எரித்திரியாவில் ஒரு மணி நேரத்திற்கு அதற்கு ஒரு மணி நேர கட்டணமாக 100 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
இந்த நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், தேசிய பாதுகாப்பை காரணம் காட்டி, அரசாங்கமே இணைய அணுகலை கட்டுப்படுத்தியுள்ளது.
இணைய வசதி இல்லாமல் அந்த நாடு, கல்வி பொருளாதாரம் போன்றவற்றில் கடுமையாக பின்தங்கியுள்ளது. பல நாடுகள் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறி வரும் நிலையில், இந்த நாட்டில் ஏடிஎம் வசதி கூட கிடையாது.
இங்குள்ள மக்கள் கட்டாய ராணுவ சேவை செய்ய கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இந்த நாடு 'ஆப்பிரிக்காவின் வடகொரியா' என அழைக்கப்படுகிறது.
வடகொரியா கடுமையான கட்டுப்பாடு விதிக்கும் நாடாக இருந்தாலும், அங்கு இணைய வசதி உள்ளது.
எரித்திரியா சென்ற இந்தியாவை சேர்ந்த நபர் ஒருவர், இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |