பிரித்தானியாவில் 40 வயதுடைய பெண் கொலை: 20 வயது இளைஞர் கைது
பிரித்தானியாவின் எசெக்ஸ் பகுதியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
40 வயது பெண் கொலை
எசெக்ஸ் பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வீட்டில் கொலை செய்யப்பட்ட வழக்கில் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் கொலை சந்தேகத்தின் பேரில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான இளைஞர் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார்.
வெள்ளிக்கிழமை காலை 11:30 மணியளவில் எசெக்ஸ் காவல் துறைக்கு அவசர அழைப்பு வந்ததை அடுத்து, கடலோர நகரத்தில் உள்ள ஸ்கெல்மர்ஸ்டேல் சாலையில் உள்ள ஒரு வீட்டிற்கு அதிகாரிகள் விரைந்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மற்றும் ஏர் ஆம்புலன்ஸ் குழுவினருடன் இணைந்து, அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை உறுதி செய்தனர்.
பொலிஸார் விசாரணை
இந்த விசாரணையில் வேறு யாரும் சம்பந்தப்படவில்லை என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
துப்பறியும் லைமை ஆய்வாளர் ராப் ஹட்லெஸ்டன் இந்த சம்பவம் குறித்து கூறுகையில், "இந்த சம்பவம் உள்ளூர் சமூகத்தில் எவ்வளவு கவலையை ஏற்படுத்தும் என்பதை நாங்கள் அறிவோம். சம்பவத்தின் சரியான வரிசையை அறிய நாங்கள் முழுமையான விசாரணை நடத்த கடமைப்பட்டுள்ளோம் என தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அல்லது தொடர்புடைய வீடியோ காட்சிகள் வைத்திருப்பவர்கள் தகவல் அளிக்க முன்வருமாறு காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |