அமெரிக்காவின் புதிய ஆபத்தான F-47 போர் விமானம்: 5 ஆண்டு ரகசியத்தை அறிமுகப்படுத்திய டிரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ராணுவ விமானத் தொழில்நுட்பத்தில் ஒரு புரட்சிகரமான முன்னேற்றத்தை அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் F-47 போர் விமானம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் பென்டகன் அதிகாரிகள் இணைந்து ஆறாம் தலைமுறை போர் விமானமான F-47, உலகின் மிகச் சிறந்த போர் விமானமாக இருக்கும் என அறிமுகப்படுத்தியுள்ளனர்.
அடுத்த தலைமுறை வான் ஆதிக்கத் திட்டம்" (NGAD) என்ற அமெரிக்க விமானப்படையின் முக்கிய முயற்சியின் ஒரு பகுதியாக டொனால்ட் டிரம்பின் இந்த அறிவிப்பு கருதப்படுகிறது.
F-22 ராப்டர் விமானத்தை விஞ்சும் வகையில் மேம்பட்ட விமானத்தை உருவாக்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
F-47 போர் விமானத்தின் தனித்துவமான அம்சங்கள்
இந்த விமானம் விண்வெளி பொறியியலின் உச்சகட்டமாக கருதப்படுவதுடன். சிக்கலான தொழில்நுட்பம், செயல்திறன் மற்றும் அழிவுத்திறன் ஆகியவற்றில் இதுவரை எந்த நாட்டிடமும் இல்லாத புதிய சக்தியுடன் உருவாக்கப்படுகிறது.
எதிரிகளின் ராடார் அமைப்புகளுக்கு புலப்படாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் தன்னிச்சையாக இயங்கும் ட்ரோன் துணை விமானங்களுடன் இணைந்து செயல்படும் திறனையும் இந்த F-47 போர் விமானம் கொண்டுள்ளது.
F-47 விமானத்தின் முன்மாதிரி ஐந்து ஆண்டுகளாக ரகசியமாக சோதனைப் பறப்பில் இருந்து வருகிறது. "இது இதுவரை உருவாக்கப்பட்ட மிக மேம்பட்ட, அழிவுகரமான மற்றும் தகவமைக்கும் திறன் கொண்ட போர் விமானம்" என்று விமானப்படை தெரிவித்துள்ளது.
லாக்ஹீட் மார்ட்டின் மற்றும் நார்த்ரோப் க்ரம்மன் போன்ற பெரிய நிறுவனங்களை தோற்கடித்து போயிங் நிறுவனம் இந்த திட்டத்திற்கான ஒப்பந்தத்தை வென்றுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |