பிரித்தானியாவில் பதின்பருவ மாணவியிடம் தகாத முறையில் பேசிய ஆசிரியர்: வாழ்நாள் தடை
Essex teacher duhig banned life time teaching: பிரித்தானியாவில் மாணவியிடம் தகாத முறையில் பேசியஆசிரியருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் ஆசிரியர் ஒருவர், மாணவியுடன் படுக்கையை பகிர்ந்துகொள்ள விரும்புவதாக கூறியதற்காக, அவரது பணியில் இருந்து வாழ்நாள் தடை விதிக்கப்பட்டார்.
டேட்டிங் செயலி மூலம்
பிரித்தானியாவின் Dagenham-யில் உள்ள Godwin தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியவர் டேனியல் டுஹிக் (29).
எசெக்ஸின் ஹார்ன்சர்ச் பகுதியைச் சேர்ந்த இவர், 18 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கான டேட்டிங் செயலி மூலம் 16 வயதுக்கும் குறைவான சிறுமி ஒருவரிடம் பேசியுள்ளார்.
கடந்த 2023 டிசம்பர் மாதம் குறித்த சிறுமிக்கு பாலியல் ரீதியான குறுஞ்செய்திகளை டுஹிக் அனுப்பியிருக்கிறார். அதில் பள்ளி மாணவியான அந்த சிறுமியிடம் படுக்கையை பகிர்ந்துகொள்ள விரும்புவதாக டுஹிக் கூறியிருக்கிறார்.
அதனைத் தொடர்ந்து எழுந்த புகாரினையடுத்து டேனியில் டுஹிக் 2024-ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்ட அவர், பாதிக்கப்பட்டவர் ஒரு சிறுமி என்று தனக்கு தெரியாது என்று வாதிட்டார்.
என்றாலும், ஒரு சிறுமியுடன் பாலியல் ரீதியான தொடர்பை ஏற்படுத்த முயன்ற குற்றத்திற்காக டேனியல் தண்டிக்கப்பட்டார். பணியில் இருந்து நீக்கப்பட்ட டேனியல், தனது தொழில் வாழ்க்கையைத் தொடர மற்றொரு வாய்ப்பு வழங்குமாறு பள்ளியிடம் கோரினார்.
கற்பித்தல் பணியில் ஈடுபட தடை
இதற்கிடையில் ஆசிரியருக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, அது 18 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. அத்துடன் அவர் மறுவாழ்வு பயிற்சியில் ஈடுபடவும், 100 மணிநேரம் ஊதியமில்லா சமூக பணியை செய்யவும் உத்தரவிடப்பட்டது.
மேலும், பாதிக்கப்பட்டவருக்கு 154 பவுண்டுகள் மற்றும் அரசுத் தரப்பு வழக்கு செலவுகளுக்காக 85 பவுண்டுகளை அவர் செலுத்த வேண்டியிருந்தது; அத்துடன் அவர் ஏழு ஆண்டுகளுக்கு 'பாலியல் குற்றவாளிகள் பதிவேட்டில்' சேர்க்கப்பட்டார்.
இந்த நிலையில், லண்டனின் Redbridge பகுதியில் Learning Support Assistant ஆக முன்பு பணியாற்றிய டுஹிக், ஒரு தீர்ப்பாயத்தின் விசாரணையில் வாழ்நாள் முழுவதும் கற்பித்தல் பணியில் ஈடுபட தடை செய்யப்பட்டுள்ளார்.
ஆசிரியர் ஒழுங்குமுறைக் குழு, டேனியல் டுஹிக் எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றங்களை செய்வதற்கான வாய்ப்பு அதிகம் என்று கண்டறிந்தது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |