12,000 ஆண்டுகளுக்கு பின் வெடித்து சிதறிய எரிமலை: இந்தியாவில் விமான சேவைகள் பாதிப்பு
எத்தியோப்பியாவில் 12,000 ஆண்டுகளுக்கு பின் எரிமலை ஒன்று வெடித்து சிதறியுள்ளது.
எரிமலை வெடிப்பு
கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் 12,000 ஆண்டுகளுக்கு பின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள எரிமலை ஒன்று வெடித்து சிதறியுள்ளது.
ஹைலே குப்பி என்று அழைக்கப்படும் எரிமலை அந்நாட்டின் தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து 500 மைல் தொலைவில் அமைந்துள்ளது.

இந்த எரிமலை வெடிப்பு காரணமாக உருவான கரும்புகை பல கிலோ மீட்டர் தூரம் வரை சூழ்ந்து இருப்பதால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
மேலும் எரிமலை குழம்பு வெளியேறி வருவதால் மலையை சுற்றியுள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்தியா நோக்கி நகரும் சாம்பல் மேகங்கள்
ஹைலே குப்பி எரிமலையினால் உருவான சாம்பல் மேகங்கள் இந்தியா, ஏமன், ஓமன் மற்றும் வடக்கு பாகிஸ்தான் ஆகிய நகரங்களை நோக்கி நகர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
UNBELIEVABLE SATELLITE FOOTAGE
— Christion Maronite (@eye_the49565) November 24, 2025
A massive eruption has just exploded from Ethiopia’s Hayli Gubbi volcano, the first recorded eruption in its history.
The ash plume shot 10–15 km into the air and is drifting over the Red Sea and Arabia. pic.twitter.com/KVVuriFwlE
ஹைலே குப்பி எரிமலை வெடிப்பு காரணமாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் சாம்பல் மேகங்கள் காரணமாக இந்தியா போன்ற சில நாடுகளில் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
சாம்பல் புகை காரணமாக கண்ணூரில் இருந்து அபுதாபிக்கு சென்ற இண்டிகோ விமானம் அகமதாபாத் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது. அத்துடன் மேலும் சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |