ஏப்ரலில் வரலாறு காணாத எரிசக்தி தட்டுப்பாடு: ஐரோப்பிய நாடுகளுக்கு IEA எச்சரிக்கை
உலகளவில் ஏப்ரலில் வரலாறு காணாத எரிசக்தி தட்டுப்பாடு ஏற்படும் என IEA எச்சரிக்கை விடுத்துள்ளது.
வரலாறு காணாத எரிசக்தி தட்டுப்பாடு
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் சூழல் காரணமாக உலக அளவில் ஏப்ரலில் எரிசக்தி விநியோகத்தில் மிகப்பெரிய தட்டுப்பாடு ஏற்படும் என்று சர்வதேச எரிசக்தி முகமையின்(IEA) தலைவர் பாத்தி பிரோல் எச்சரித்துள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு இருப்பதால் மார்ச் மாதத்தை விட ஏப்ரலில் எண்ணெய் விநியோக தட்டுப்பாடு இரண்டு மடங்கு அதிகரிக்கும் என நோர்வே வங்கி முதலீட்டு நிர்வாகத்தின் CEO நிகோலாய் டாங்குடன் நடந்த பாட்காஸ்டில் IEA தலைவர் பாத்தி பிரோல் எச்சரித்துள்ளார்.

மத்திய கிழக்கு சூழ்நிலை காரணமாக இதுவரை 12 மில்லியன் பேரல் எண்ணெய் விநியோகம் நாளொன்றுக்கு பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் போர் நடவடிக்கைகள் காரணமாக இதுவரை 40 முக்கிய எரிசக்தி நிலையங்கள் சேதமடைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பாவிற்கு நெருக்கடி
ஹார்முஸ் ஜலசந்தி அடைக்கப்பட்டதால் பெரும் அளவிலான பாதிப்பு ஆசிய நாடுகளுக்கே இதுவரை ஏற்பட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கிட்டத்தட்ட 80% எண்ணெய் மற்றும் எரிவாயுகள் ஆசிய நாடுகளுக்கு வணிகம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் இந்த பாதிப்பு தற்போது ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவும் என கணிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் அல்லது மே மாதங்களில் ஐரோப்பிய நாடுகளுக்கான டீசல் மற்றும் விமான எரிபொருள் தட்டுப்பாடு உருவாகும் என பிரோல் எச்சரித்துள்ளார்.
ஏற்கனவே எண்ணெய் தட்டுப்பாட்டை குறைக்க IEA வரலாறு காணாத அளவு கையிருப்பை வெளியிட்டு இருப்பதாகவும், தேவை அதிகரித்தால் அதற்கான நடவடிக்கையையும் எடுக்க IEA தயாராக இருப்பதாக பிரோல் உறுதியளித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |