ரஷ்யா மீது குவியும் அழுத்தம்: நான்காம் கட்ட தடைகளுக்கு ஐரோப்பிய யூனியன் அனுமதி
உக்ரைனின் மீதான ரஷ்ய படையெடுப்பு நடவடிக்கையை எதிர்த்து மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகள் பலவும் பல்வேறு பொருளாதார தடைகளை அறிவித்து இருந்த நிலையில், ரஷ்யா மீதான நான்காவது கட்ட தடைகளுக்கும் ஐரோப்பிய யூனியன் இன்று அனுமதி வழங்கி உள்ளது.
ரஷ்யா சர்வதேச விதிமுறைகளை மீறி உக்ரைன் மீது போர் நடத்துவதாக கண்டித்து அமெரிக்கா, கனடா, பிரித்தானிய அவுஸ்ரேலியா மற்றும் ஜப்பான் என பல்வேறு நாடுகளும் பலவகையான பொருளாதார தடைகளை அறிவித்து வந்தனர்.
இந்தநிலையில், செய்வாய்க்கிழமையான இன்று ரஷ்யாவின் மீதான பொருளாதார மற்றும் தனிமைப்படுத்துதலுக்கான நான்காம் கட்ட தடைகளுக்கு ஐரோப்பிய யூனியன் அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.
இந்த நான்காம் கட்ட தடையில், ரஷ்யாவிற்கு ஏற்றுமதியாகும் ஆடம்பர பொருள்கள் மீதான தடை, ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்டீல் மற்றும் இரும்பு பொருள்களுக்கு தடை, ரஷ்யாவை சேர்ந்த தனிநபர் அல்லது நிறுவனங்களுக்கான கடன் மதிப்பீடு வழங்குவதற்கான தடை ஆகியவை இடம்பெற்றுள்ளன.
மேலும் ரஷ்யாவின் எரிசக்தி துறையில் புதிய முதலீடு, தொழில்நுட்பம் அல்லது உபகரணம் வழங்குதல் மற்றும் ஆற்றல் வளங்களை ஆய்வு செய்தல், பிரித்தெடுத்தல் போன்ற அனைத்து சேவைகளுக்கும் தடைவிதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் வெற்றியை நெருங்கிறது! ஜனாதிபதி ஜெலன்ஸ்கி: ரஷ்ய வீரர்களுக்கு அளிக்கும் இறுதி வாய்ப்பு