பேரிடரால் பாதிக்கப்பட்ட 3 நாடுகள்: € 144.1 மில்லியன் அவசரகால நிதியை ஒதுக்கீடு செய்த ஐரோப்பிய ஒன்றியம்

Spain European Parliament Europe
By Thiru Jul 08, 2026 08:37 AM GMT
Report

பேரிடரால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு சுமார் 144.1 மில்லியன் யூரோக்களை அவசரகால நிதி உதவியாக வழங்கி ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.

அவசர கால நிதி உதவி

2025ம் ஆண்டு கடுமையான காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்பட்ட ஸ்பெயின், ருமேனியா மற்றும் சைப்ரஸ் ஆகிய நாடுகளுக்கு இயற்கை பேரிடரை சமாளிக்க சுமார் 144.1 மில்லியன் யூரோக்களை அவசரகால நிதி உதவியாக வழங்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இந்த நிதியுதவி தொடர்பாக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 642 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

பேரிடரால் பாதிக்கப்பட்ட 3 நாடுகள்: € 144.1 மில்லியன் அவசரகால நிதியை ஒதுக்கீடு செய்த ஐரோப்பிய ஒன்றியம் | Eu Approves 144 M In Emergency Aid To 3 Nations

இந்த நிதியானது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றுமை நிதியிலிருந்து வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த நிதியானது பாதிக்கப்பட்ட நாடுகளின் உள்கட்டமைப்பு சீரமைப்பு, தற்காலிக வீடு வழங்குதல், மீட்பு மற்றும் தூய்மை பணிகளுக்காக நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடுகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி

ஸ்பெயின் நாட்டிற்கு சுமார் 120.55 மில்லியன் யூரோக்களை அவசரகால நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஸ்பெயின் கடுமையான வறட்சி மற்றும் வெப்ப அலையினால் பாதிக்கப்பட்டது.

பேரிடரால் பாதிக்கப்பட்ட 3 நாடுகள்: € 144.1 மில்லியன் அவசரகால நிதியை ஒதுக்கீடு செய்த ஐரோப்பிய ஒன்றியம் | Eu Approves 144 M In Emergency Aid To 3 Nations

கிட்டத்தட்ட 243 காட்டுத்தீ சம்பவங்களை எதிர்கொண்டது, ஆகஸ்ட் 8ம் திகதி தொடங்கிய காட்டுத்தீ சம்பவத்தில் 8 பேர் வரை உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

ரூமேனியாவிற்கு  சுமார் 14.34 மில்லியன் யூரோக்களை அவசரகால நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ரூமேனியா மே மாத இறுதி மற்றும் ஜூன் மாத தொடக்கத்தில் கடுமையான வெள்ள பாதிப்புகளை எதிர்கொண்டது.

இதில் பிரைடு உப்புச் சுரங்கம் உட்பட பல இடங்களின் உள்கட்டமைப்புகள் சேதமடைந்தன.

சைப்ரஸ் நாட்டிற்கு  சுமார் 9.21 மில்லியன் யூரோக்களை அவசரகால நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பாஃபோஸ் மற்றும் லிமாசோல் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ மிகப்பெரிய சேதத்தை அந்நாட்டிற்கு ஏற்படுத்தியது. இதில் 2 பேர் வரை உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய நிதி ஒதுக்கீட்டிற்கு முன்னதாகவே ஸ்பெயினுக்கு  130 மில்லியன் யூரோக்களும், சைப்ரஸ் நாட்டிற்கு 2.3 மில்லியன் யுரோக்களும் மீட்பு பணிகளுக்காக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US