EU தலைவர் மோடியுடன் தொலைபேசியில் உரையாடல்: உக்ரைன் போரில் இந்தியாவின் பங்கிற்கு பாராட்டு
EU Chief Praises India’s Role in Ukraine Peace மோடியுடன் தொலைபேசியில் உரையாடிய ஐரோப்பிய ஒன்றிய தலைவர், உக்ரைன் போர் தொடர்பில் இந்தியாவின் பங்கிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றிய ஆணைய தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் (Ursula von der Leyen), உக்ரைன் போருக்கான ஐரோப்பாவின் தொடர் முயற்சியில் ஒரு பகுதியாக இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேசினார்.
இந்த உரையாடலில், ரஷ்யாவின் போர் நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வர அழுத்தம் கொடுக்கும் இந்தியாவின் பங்கு குறித்து பாராட்டு தெரிவித்தார்.
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் இந்தியா தொடர்ந்து தொடர்பில் இருப்பதை ஐரோப்பிய ஒன்றியம் மிகவும் வரவேற்கிறது என உர்சுலா தெரிவித்துள்ளார்.
இந்த போர் உலகளாவிய பாதுகாப்பிற்கு ஆபத்தாகவும், பொருளாதார நிலைத்தன்மையை பாதிக்கக்கூடியதாகவும் இருப்பதாக அவர் கவலை தெரிவித்தார்.
இந்தியாவுடனான வரவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்தில், 2026- நடைபெறவுள்ள அடுத்த ஐரோப்பிய ஒன்றிய-இந்திய உச்சி மாநாட்டில் இரு தரப்பும் கூட்டு மூலோபாய திட்டத்தை ஏற்க திட்டமிட்டுள்ளனர்.
மேலும், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) தொடர்பான பேச்சுவார்த்தைகளை இந்த ஆண்டிற்குள் முடிக்க ஐரோப்பிய ஒன்றியம் உறுதியளித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
India Ukraine diplomacy, EU Ursula von der Leyen Modi, Modi Ukraine peace talks, India Russia war mediation, EU India strategic summit 2026, Free Trade Agreement India EU, Global security Ukraine war, Zelensky Modi communication, India foreign policy Ukraine, EU India relations 2025