மூன்று நாடுகளுக்கான வேட்பாளர் அந்தஸ்து: ஐரோப்பிய ஆணைக்குழு முக்கிய பரிந்துரை
உக்ரைன், மால்டோவா, மற்றும் ஜார்ஜியா ஆகிய நாடுகளுக்கான வேட்பாளர் அந்தஸ்தினை வழங்குவது தொடர்பான பரிந்துரையை ஐரோப்பிய ஆணைக்குழு இன்று வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் ரஷ்யா போரை தொடர்ந்து, ரஷ்யாவின் அண்டை நாடுகளான மால்டோவா, ஜார்ஜியா மற்றும் உக்ரைன் ஆகியவை ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பான ஐரோப்பிய யூனியனில் இணைவதற்கான விருப்பத்தை தொடர்ந்து தெரிவித்து வருவதுடன் அதற்கான முன்னெடுப்புகளையும் செய்து வருகின்றனர்.
இந்தநிலையில், உக்ரைன் மால்டோவா மற்றும் ஜார்ஜியா ஆகிய நாடுகளுக்கான வேட்பாளர் அந்தஸ்தினை வழங்குவது தொடர்பான பரிந்துரையை ஐரோப்பிய ஆணைக்குழு இன்று வழங்க இருப்பதாக ப்ளூம்பெர்க் (Bloomberg) செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
The European Commission is going to recommend granting #Ukraine, #Moldova and #Georgia the status of candidates for #EU accession, reports Bloomberg.
— NEXTA (@nexta_tv) June 17, 2022
To do this, the countries will have to fulfill several requirements relating to the rule of law and the fight against corruption. pic.twitter.com/5Tltb14lOY
ஆனால் இதற்கு சம்பந்தப்பட்ட நாடுகள் ஐரோப்பிய யூனியனின் சட்டம் மற்றும் ஊழலுக்கு எதிரான நடவடிக்கை தொடர்பான சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: நாங்கள் விதிப்பது தான் சட்டம்... ஐரோப்பிய நாடுகளுக்கு மிரட்டல் விடுத்த ரஷ்யா
இதுத் தொடர்பாக ரேடியோ லிபர்ட்டி நிருபர் ரிக்கார்ட் ஜோஸ்வியாக் தெரிவித்த தகவலில், வேட்பாளர்களின் அடுத்தக்கட்ட நகர்வுக்கான புதிய விதிமுறைகளும் இன்று நிர்ணயம் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.