ட்ரம்பின் கிரீன்லாந்து அச்சுறுத்தல்... பதிலடிக்குத் தயாரான ஐரோப்பிய ஒன்றியம்
ட்ரம்பின் கிரீன்லாந்து அச்சுறுத்தலுக்கு பதிலடியாக 93 பில்லியன் யூரோ அளவிற்கு வரி விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது.
பதிலடி நடவடிக்கை
அல்லது அமெரிக்க நிறுவனங்களை ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்பின் சந்தையில் இருந்து கட்டுப்படுத்துவது என்ற முடிவுக்கும் வந்துள்ளனர்.

கிரீன்லாந்தைக் கைப்பற்றுவதற்கான தனது நடவடிக்கைகளை எதிர்த்த நேட்டோ கூட்டாளிகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த மிரட்டல்களுக்குப் பதிலளிக்கும் விதமாகவே இந்த நகர்வு.
மட்டுமின்றி, இந்த வாரம் டாவோஸில் நடைபெறும் உலகப் பொருளாதார மன்றத்தில் ட்ரம்ப்புடன் நடக்கவிருக்கும் முக்கிய சந்திப்புகளில் ஐரோப்பியத் தலைவர்களுக்குச் செல்வாக்கு அளிக்கும் நோக்கில், இந்த பதிலடி நடவடிக்கைகள் வகுக்கப்பட்டு வருகின்றன.
ட்ரம்பின் கிரீன்லாந்து கனவுக்கு எதிர்ப்பு... பிரித்தானியா உட்பட 8 ஐரோப்பிய நாடுகள் மீது வரி விதிப்பு
முன்னதாக, கிரீன்லாந்தை சொந்தமாக்கும் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் பிரித்தானியா உட்பட 8 ஐரோப்பிய நாடுகள் மீது டொனால்ட் ட்ரம்ப் சிறப்பு வரி விதித்திருந்தார்.
25 சதவீத வரி
டென்மார்க், நோர்வே, சுவீடன், பிரான்ஸ், ஜேர்மனி, பிரித்தானியா, நெதர்லாந்து மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் மீது 10 சதவீத வரியும், ஜூன் 1 ஆம் திகதிக்குள் கிரீன்லாந்து விவகாரத்தில் இந்த நாடுகள் அமெரிக்காவிற்கு சாதகமான முடிவை எட்டத்தவறினால் 25 சதவீத வரியும் விதிக்கப்படும் என சனிக்கிழமை ட்ரம்ப் அறிவித்திருந்தார்.
இந்த வரி விதிப்புக்கு பிரான்ஸ், ஜேர்மனி, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் உடனடியாக பதிலளித்தன. தொடர்ந்து 8 நாடுகளும் கூட்டாக கண்டன அறிக்கை வெளியிட்டன.

தற்போது ட்ரம்பின் அச்சுறுத்தலுக்கு பதிலடியாக வரி விதிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுங்க வரிகள் என்பவை ஒரு நாடு இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மீது விதிக்கப்படும் வரிகள் ஆகும், மேலும் இவை பொதுவாக வெளிநாட்டுப் பொருட்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்களால் அரசாங்கத்திற்குச் செலுத்தப்படுகின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |