ரஷ்யர்களுக்கு கடுமையான விசா விதிகள்: ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் முடிவு
ரஷ்யர்கள் விடுமுறையைக் கழிப்பதை கடினமாக்குமாறு பிரஸ்ஸல்ஸை, ஐரோப்பிய நாடுகளின் குழு ஒன்று வலியுறுத்தியுள்ளது.
மகிழ்ச்சியாக பயணம் செய்வது கவலை
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ரஷ்யர்களுக்கு கடுமையான விசா விதிகளை கோருகின்றன.

லக்சம்பர்க்கில் நடைபெற்ற கூட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்துறை அமைச்சர்கள் விவாதித்தனர்.
இந்த வாரத் தொடக்கத்தில் ஷெங்கன் பகுதியின் உறுப்பினர்களான போலந்து, நார்வே, பால்டிக் நாடுகள் மற்றும் 9 பிற நாடுகள் கையெழுத்திட்ட கடிதத்தின் அடிப்படையில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அந்த கடிதத்தில், "உக்ரைனில் ஏவுகணைகளும், ட்ரோன் விமானங்களும் பொதுமக்கள் மற்றும் பொது உள்கட்டமைப்புகளைத் தொடர்ந்து தாக்கி வரும் நிலையில், அதிகரித்து வரும் ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் ஐரோப்பிய கடற்கரைகளிலும், ஐரோப்பிய ஓய்விடங்களிலும் மகிழ்ச்சியாக பயணம் செய்வதைக் காண்பது மிகவும் கவலையளிக்கிறது" கூறப்பட்டுள்ளது.
ரஷ்யர்கள் ஐரோப்பாவிற்கு எளிதாக செல்லும் வாய்ப்புகள் பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுவதாக வாதிட்ட அவர்கள், "புதிய, கட்டுப்பாடான மற்றும் கட்டாயமாக்கும் விசா நடைமுறைகளை" அமுல்படுத்துமாறு வலியுறுத்தினர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |