புலம்பெயர்ந்தோருக்கு திகிலை ஏற்படுத்த மெகா திட்டம்: 19 நாடுகள் ருவாண்டா திட்டத்தை பின்பற்ற விருப்பம்
புலம்பெயர்ந்தோரை ருவாண்டாவுக்கு நாடுகடத்தும் பிரித்தானியாவின் திட்டம் மற்ற சில ஐரோப்பிய நாடுகளையும் வெகுவாக கவர்ந்துள்ளது. ரிஷியைப் போலவே, புலம்பெயர்ந்தோரை ஆப்பிரிக்க நாடொன்றிற்கு அனுப்பி புகலிடக்கோரிக்கைகளை பரிசீலிக்க 19 நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ள தகவல், புலம்பெயர்வோருக்கு திகிலை ஏற்படுத்தும் ஒரு செய்தியாக அமைந்துள்ளது.
Credit: PA
பிரித்தானியாவை பின்பற்ற விரும்பும் 19 நாடுகள்
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கைப் பொருத்தவரை, புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துதல் அவரது அரசியல் வாழ்க்கையை முடிவு செய்யும் ஒரு முக்கிய விடயமாகிவிட்டது. உள்ளாட்சித் தேர்தல்களில் அவரது கட்சி சந்தித்துள்ள படுதோல்வியைத் தொடர்ந்து, அடுத்து வரும் தேர்தலில் அவரது கட்சி வெற்றி பெறவேண்டுமானால், அவர் அதிரடியாக எதையாவது செய்தால் மட்டுமே அதற்கு கொஞ்சமாவது வாய்ப்புள்ளது என்னும் ஒரு நிலை உருவகியுள்ளது.
இப்படிப்பட்ட ஒரு சூழலில்தான், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளில் 19 நாடுகள், பிரித்தானியாவைப் பின்பற்றி, புலம்பெயர்ந்தோரை ஆப்பிரிக்க நாடொன்றிற்கு அனுப்பி புகலிடக்கோரிக்கைகளை பரிசீலிக்க விருப்பம் தெரிவித்துள்ளன.
Credit: AFP
இந்த செய்தி புலம்பெயர்வோருக்கு திகிலை ஏற்படுத்துவதாக அமைந்துள்ள அதே நேரத்தில், பிரித்தானிய பிரதமர் ரிஷிக்கோ, அரசியலில் அழுத்தமாக காலூன்ற அது பெரும் பலமாக அமைந்துள்ளது எனலாம்.
இன்னொருபக்கம், இந்த 19 நாடுகளும் புகலிடக்கோரிக்கையாளர்களை நிரந்தரமாக ஆப்பிரிக்க நாடொன்றிற்கு நாடுகடத்த முடிவு செய்யவில்லை. அவர்களுடைய புகலிடக்கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்வரை, அவர்களை வேறொரு நாட்டுக்கு அனுப்பி அங்கு தங்க வைக்கவே விருப்பம் தெரிவித்துள்ளன. என்றாலும், இந்த திட்டத்தை ரிஷி துவக்கி வைத்ததால், உலக அரசியலில் அவர் கவனம் ஈர்த்துள்ளது, அவரது அரசியல் வாழ்க்கைக்கும் உத்வேகமளிக்கும் விடயமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது..
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |