அமுலுக்கு வரும் Entry/Exit System : பிரித்தானியர்களுக்கு சில முக்கிய தகவல்கள்
2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12ஆம் திகதி அமுலுக்கு வருவதாக இருந்த EES என்னும் EU entry/exit system, நாளை, அதாவது, ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி அமுலுக்கு வர உள்ளது.
Entry/Exit System - EES திட்டம்
நாளை முதல், ஐரோப்பிய ஒன்றியத்துக்குப் பயணிக்கும் பிரித்தானியர்கள், இனி, எல்லையில், தானியங்கி இயந்திரம் ஒன்றில் தங்கள் கைரேகை, புகைப்படம் (biometric data) போன்றவற்றை பதிவு செய்யவேண்டியிருக்கும்.

பயண ஆவணங்களில் அதிகாரிகள் முத்திரை பதிப்பதற்கு மாற்றாக இனி இந்த EES திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
மேலும், அந்த இயந்திரம், உங்களிடம் போதுமான பணம் உள்ளதா, திரும்ப வருவற்கு பயணச்சீட்டு முன்பதிவு செய்துவிட்டீர்களா, பிரான்சில் ஹொட்டல் முன்பதிவு செய்துவிட்டீர்களா, உங்களுக்கு மருத்துவக் காப்பீடு உள்ளதா என்னும் கேள்விகளைக் கேட்கும்.
அதுமட்டுமல்ல, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கேள்விகளில் நீங்கள் விதிகளுக்கு உட்படும் வகையிலான பதிலளிக்கவில்லையென்றால், நீங்கள் திருப்பி அனுப்பப்படலாம்.
இப்போதைக்கு, 25 ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளிலும், ஷெங்கன் பகுதியிலுள்ள நான்கு நாடுகளிலும் EES திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
ஆஸ்திரியா, பெல்ஜியம், பல்கேரியா, குரோவேசியா, செக் குடியரசு, டென்மார்க், எஸ்தோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, கிரீஸ், ஹங்கேரி, ஐஸ்லாந்து, இத்தாலி, லாத்வியா, Liechtenstein, லிதுவேனியா, லக்ஸம்பர்க், மால்ட்டா, நெதர்லாந்து, நோர்வே, போலந்து, போர்ச்சுகல், ரொமேனியா, ஸ்லோவேகியா, ஸ்லோவேனியா, ஸ்பெயின், ஸ்வீடன் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகியவை இந்த EES திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ள நாடுகள் ஆகும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |