பிரதமர் ஒருவரின் தேர்தல் தோல்விக்காக காத்திருக்கும் பல ஐரோப்பிய நாடுகள்
ஐரோப்பாவின் முக்கியமான சில கொள்கைகளுக்கு கடும் முட்டுக்கட்டையாக இருந்துவந்த ஹங்கேரியின் பிரதமர் விக்டர் ஓர்பனின் தேர்தல் தோல்விக்காக சில ஐரோப்பிய தலைவர்கள் காத்திருப்பதாக தகவல் கசிந்துள்ளது.
தலைகீழாக மாற்றுவார்
விக்டர் ஓர்பனின் எதிராகக் களமிறங்கியுள்ளவரும் ஐரோப்பா குறித்த புடாபெஸ்டின் அணுகுமுறையை முழுமையாகத் தலைகீழாக மாற்றுவார் என்றும் அந்த ஐரோப்பிய தலைவர்கள் எதிர்பார்க்கவில்லை என கூறப்படுகிறது.

இதுவரை வெளியான பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில், கடந்த 2010 முதல் ஆட்சியில் இருந்து வரும் விக்டர் ஓர்பனின் தேசியவாத Fidesz கட்சி, பீற்றர் மாக்யாரின் Tisza கட்சியிடம் ஆட்சியப் பறிகொடுக்கும் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் மிக நெருக்கமான உறவை முன்னெடுத்து வரும் விக்டர் ஓர்பான், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புடனும் இணக்கமானவர்.
தடை முடிவுக்கு வரும்
இதனாலையே அடிக்கடி தனது ஐரோப்பிய ஒன்றிய கூட்டாளிகளை ஆத்திரமூட்டியும் வந்துள்ளார். மிகச் சமீபத்தில், உக்ரைனுக்கான 90 பில்லியன் யூரோ மதிப்பிலான மிக முக்கியமான கடனைத் தடுத்து நிறுத்தினார்.

ஓர்பன் ஆட்சியை இழந்தால், உக்ரைனுக்கான கடன் முதல் ரஷ்யா மற்றும் வன்முறையைத் தூண்டும் இஸ்ரேலிய குடியேறிகளுக்கு எதிரான தடைகள் உள்ளிட்ட மிக முக்கியமானக் கொள்கைகள் மீதான ஹங்கேரியின் தடை முடிவுக்கு வரும் என்று பல ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்களின் தூதர்கள் நம்புவதாகக் கூறுகின்றனர்.
ஆனால், ஓர்பன் மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்தால், ஹங்கேரி மெல்ல ஒதுக்கி வைக்கப்படும் என சில அதிகாரிகள் தரப்பு சூசகமாக தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |