புடின் மகள்களை குறிவைக்கும் ஐரோப்பிய ஒன்றியம்! கசிந்த முக்கிய தகவல்
ரஷ்ய அதிபர் புடினின் இரண்டு மகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் பொருளாதார தடைகளை விதித்துள்ளதாக பெயர் வெளியிட விரும்பாத இரண்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைனின் புச்சா நகரில் மக்கள் படுகொலை செய்யப்பட்டு சாலைகளில் வீசப்பட்டு கிடந்த காணொளிகள் இணையத்தில் வெளியாகி சர்வதேச அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, ரஷ்யா மீது கடுமையான புதிய பொருளாதார தடைகளை விதிக்க மேற்கத்திய நாடுகள் திட்டமிட்டுள்ளன.
உக்ரைனில் ரஷ்யாவால் நிகழ்த்தப்பட்டதாக கூறப்படும் போர் குற்றங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், சில நாட்களுக்கு முன் புடினின் இரண்டு மகள்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது, மேலும் ரஷ்ய வங்கிகள் மீதான தடைகளை கடுமையாக்கியது.
அமெரிக்காவை தொடர்ந்து புடின் மகள்கள் Maria Vorontsova மற்றும் Katerina Tikhonova மீது ஐரோப்பிய ஒன்றியம் பொருளாதார தடை விதித்துள்ளதாக பெயர் வெளியிட விரும்பாத இரண்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சொத்துக்கள் முடக்கம் மற்றும் பயணத் தடைகளை எதிர்கொள்ளும் தனிநபர்களின் புதுப்பிக்கப்பட்ட பட்டியலில் Maria Vorontsova மற்றும் Katerina Tikhonova ஆகியோரை ஐரோப்பிய ஒன்றியம் சேர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
எனினும், புதுப்பிக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்தில் பொருளாதார தடை பட்டியில் இன்னும் வெளியிடப்படவில்லை.
புடின்-அவரது முன்னாள் மனைவி Lyudmila Putina ஜோடிக்கு Mariya Putina, Yekaterina Putina என இரண்டு மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.