புலம்பெயர் மக்களை திருப்பி அனுப்ப பாதுகாப்பான நாடுகள்: ஐரோப்பிய ஆணையத்தின் முடிவால் சர்ச்சை
புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட புலம்பெயர் மக்களை திருப்பி அனுப்ப பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் எகிப்தையும் துனிசியாவையும் சேர்க்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மனித உரிமைகள்
குறித்த இரு நாடுகளிலும் மனித உரிமைகள் கேள்விக்குறியாக உள்ளது என்பதே சர்ச்சைக்கு காரணம். ஐரோப்பிய ஆணையம் வெளியிட்டுள்ளப் பட்டியலை மனித உரிமைகள் குழுக்கள் கடுமையாக விமர்சித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியப் பட்டியல், பட்டியலில் உள்ள நாடுகளைச் சேர்ந்த குடிமக்களின் புகலிடக் கோரிக்கைகளை விரைவான நடைமுறையில் செயல்படுத்த உறுப்பு நாடுகளை அனுமதிக்கும்.
பாதுகாப்பான நாடுகள்
கடந்த ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் சட்டவிரோத குடியேறிகள் நுழைவது 38% குறைந்திருந்தாலும், கூட்டமைப்பின் 27 உறுப்பு நாடுகளிடையே குடியேற்றம் மிகவும் சிக்கல் வாய்ந்த பிரச்சினையாக உள்ளது.
தற்போது பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் பங்களாதேஷ், கொலம்பியா, இந்தியா, கொசோவோ, மொராக்கோ, எகிப்து மற்றும் துனிசியா ஆகிய நாடுகள் சேர்க்கபப்ட்டுள்ளது. மேலும் காலப்போக்கில் விரிவாக்கப்படலாம் அல்லது மதிப்பாய்வு செய்யப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |