உக்ரைனுக்கான நிதி உதவி நிறுத்தம்! ஐரோப்பிய தலைவர்கள் அவசர ஆலோசனை
உக்ரைன் ரஷ்யா போர் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் அவசர ஆலோசனை கூட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
டொனால்ட் டிரம்பின் அதிரடி அறிவிப்பு
ரஷ்யாவின் போர் நடவடிக்கையில் உக்ரைனுக்கு ஆதரவாக வழங்கப்படும் நிதியுதவி நிறுத்தப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அத்துடன் போர் நடவடிக்கையில் உக்ரைனுக்கு வழங்கப்பட்டு வந்த அனைத்து உளவு தகவல்களையும் அமெரிக்கா நிறுத்து விட்டதாகவும் நேற்று தகவல் வெளியானது.
🇪🇺"Europe has sent a powerful signal to Ukrainians — we do not feel abandoned", — Zelensky pic.twitter.com/1mZAONnjBD
— NEXTA (@nexta_tv) March 6, 2025
அமெரிக்காவின் நிதி நிறுத்தப்பட்டுள்ளதை அடுத்து உக்ரைனுக்கான நிதி நெருக்கடியை ஈடுகட்ட வேண்டிய நெருக்கடி ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் உக்ரைன் ரஷ்யா போர் தொடர்பில் பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் உள்ள ஐரோப்பிய கவுன்சில் தலைமையகத்தில் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் கூடி அவசர உச்சி மாநாடு ஒன்றை நடத்தியுள்ளனர்.
முக்கிய முடிவு
இந்த உச்சி மாநாட்டில் உக்ரைனுக்கு நிதி நெருக்கடி ஏற்படுவதை தடுக்க உக்ரைனுக்கு கடன் வழங்குவதற்கு ஏற்ப விதிகளை மாற்ற வேண்டும் என்று முடிவெடுத்துள்ளனர்.
மேலும் ஐரோப்பாவின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்துள்ளனர்.
❗️We need peace through strength — European Commission President Ursula von der Leyen at the EU security summit
— NEXTA (@nexta_tv) March 6, 2025
According to Ursula von der Leyen, EU leaders will be presented with a rearmament plan today, allocating up to €800 billion for defense investments.
"Extraordinary… pic.twitter.com/QIBzkWWosx
உச்சி மாநாடு குறித்து முன்னதாக பேசிய பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், ஐரோப்பாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதுமையான ஆயுதங்கள் வாங்குவதில் மிகப் பெரிய அளவில் கூட்டு நிதி வழங்கப்படும் என தெரிவித்தார்.
அத்துடன், ஐரோப்பாவின் எதிர்காலத்தை வாஷிங்டன் மற்றும் ரஷ்யாவில் முடிவு செய்யப்பட வேண்டியது இல்லை என்றும் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |