லண்டனில் சந்தித்துக் கொண்ட ஐரோப்பிய தலைவர்கள்: ரஷ்யா மீது அழுத்தத்தை அதிகரிக்க உறுதி
ரஷ்யாவின் மீதான அழுத்தத்தை அதிகரிக்க ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் உறுதியளித்துள்ளனர்.
லண்டனில் சந்தித்துக் கொண்ட தலைவர்கள்
உக்ரைன் - ரஷ்யா போர் தொடர்பில், லண்டனில் உள்ள டவுனிங் ஸ்ட்ரீட்டில் பிரித்தானியா பிரதமர் சர் கீர் ஸ்டார்மர், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான், ஜேர்மன் சான்ஸ்லர் ஃபிரெட்ரிக் மெர்ஸ் மற்றும் உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ஆகியோர் சந்தித்துக் கொண்டு முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஐரோப்பிய கூட்டாளிகள் பங்கேற்ற இந்த உயர்மட்ட சந்திப்பிற்கு பிரித்தானிய பிரதமர் சர் கீர் ஸ்டார்மர் தலைமையேற்றிருந்தார்.
விருப்பமுள்ள கூட்டணி(Coalition of the willing) என்றழைக்கப்படும் இந்த குழு உக்ரைனில் நடந்து வரும் மிகவும் மிருகத்தனமான ரஷ்யாவின் தாக்குதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ரஷ்யாவின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும் திட்டங்களை விவாதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்புக்கு பிறகு டவுனிங் ஸ்ட்ரீட் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட தகவலில், உயர்மட்ட தலைவர்களின் இந்த சந்திப்பு முக்கியமான தருணம் என்று விவரித்தார்.
அத்துடன் இந்த சந்திப்பில், உக்ரைனுக்கான ஆதரவை அதிகரிக்கவும், ரஷ்யாவின் மீதான பொருளாதார அழுத்தங்களை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை தலைவர்கள் ஒப்புக் கொண்டதாக உறுதிப்படுத்தியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |