ஐரோப்பாவின் விண்வெளி ஏவுதல் திட்டம்: பரிசீலனையில் கனடா, பிரித்தானியா, நார்வே நாடுகள்
EU Looks Canada, UK, Norway for space launching: ஐரோப்பிய ஒன்றியம் தங்களது ராக்கெட் ஏவுதல் திட்டங்களுக்கான பகுதிகளை தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
ஐரோப்பாவின் விண்வெளி ஏவுதல் திட்டம்
ஐரோப்பிய ஒன்றியம் தங்களது லட்சிய விண்வெளி திட்டத்திற்கான ஏவுதளங்களை அமைக்க சில வெளிநாடுகளை தீவிரமாக பரிசீலித்து வருகின்றனர்.

அந்த வகையில் பைனான்சியல் டைம்ஸ் பத்திரிக்கைக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் பாதுகாப்பு மற்றும் விண்வெளி ஆணையர் ஆண்ட்ரியல் குபிலியஸ் அளித்த பேட்டியில், ஐரோப்பாவின் விண்வெளி திட்டங்களுக்கான ராக்கெட் ஏவுதளங்களை அமைக்க கனடா, பிரித்தானியா மற்றும் நார்வே ஆகிய நாடுகளை தீவிரமாக மதிப்பிட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியம் தங்களுடைய ராக்கெட் ஏவுதல்களை 2034 ம் ஆண்டுக்குள் 6 மடங்காக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
அத்துடன் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ்(SpaceX) ஸ்டார்லிங்(Starlink) அமைப்புகளுக்கு சவாலளிக்கும் வகையில் இந்த முயற்சியானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் உள்நாடு மற்றும் நட்பு நாடுகளின் ஏவுதல் திறன்களுக்கு அதிகாரிகள் முன்னுரிமை அளிப்பதன் மூலம் பாதுகாப்பான செயற்கைக்கோள் வலையமைப்பை உருவாக்க முடியும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஐரோப்பாவின் மக்கள் தொகை மற்றும் புவியியல் அமைப்பு வரம்புகள் இங்கிருந்து விண்கலங்கள் ஏவப்படுவதை சவாலான ஒன்றாக வைத்துள்ளது. எனவே இந்த சிக்கல்களை தவிர்க்க புதிய வகை ராக்கெட் தொழில்நுட்பங்களை உருவாக்க ஆராய்ச்சியாளர்கள் ஆராய வேண்டும் என குபிலியஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.