ரஷ்யாவுடன் நெருக்கமாகும் டொனால்டு ட்ரம்ப்... புது தடைகளை விதிக்க தயாராகும் ஐரோப்பிய ஒன்றியம்
ரஷ்ய - அமெரிக்க பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், ரஷ்யா மீது புதிய சுற்று தடைகளை விதிக்க ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதிய சுற்று தடைகள்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடங்கி மூன்றாவது ஆண்டை எட்டியுள்ள நிலையில், ரஷ்யா மீது புதிய சுற்று தடைகளை விதிக்க, அலுமிய இறக்குமதி தடை உட்பட ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் முடிவெடுத்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ரஷ்யாவுடன் நெருக்கம் காட்டுவதுடன், உக்ரைன் போர் நிறுத்த அமைதிப்பேச்சுவார்த்தைகளுக்கு உக்ரைன் மற்றும் ஐரோப்பிய நாடுகளை மதிக்காத நிலையிலேயே ரஷ்யா மீது ஐரோப்பிய ஒன்றியம் 16வது சுற்று தடைகளை விதிக்க முடிவு செய்துள்ளது.
புடினின் ரகசிய கடற்படையில் அதிக கப்பல்களை குறிவைத்து, புதிய இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தடைகளை விதிப்பதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியம் நடவடிக்கைகளை இன்னும் கடினப்படுத்தி வருவதாக ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா தமது சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
உக்ரைன் மீதான போர் நிறுத்தம் தேவை என்பதால், ரஷ்யா மீது தொடர்ந்து அழுத்தமளித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ரஷ்யாவின் லாபகரமான அலுமினியத் துறையை குறிவைப்பதற்கு அப்பால், ரஷ்ய எண்ணெய் ஏற்றுமதிக்கு பயன்படுத்தப்படும் கப்பல்களில் 73 எண்ணிக்கை மீது தடை விதிக்கவும் ஐரோப்பிய ஒன்றியம் முடிவெடுத்துள்ளது.
ஒரேயடியாக ஆட்டம் காண
அத்துடன் 13 ரஷ்ய வங்கிகளையும் ஐரோப்பாவில் முடக்க முடிவு செய்துள்ளதுடன், 8 ரஷ்ய ஊடகங்களை ஐரோப்பா முழுவதும் ஒளிபரப்புவதில் இருந்தும் தடை விதிக்க உள்ளது.
மூன்று வருடங்களாக உக்ரைன் மீதான அமெரிக்க நிர்வாகத்தின் உறுதியான ஆதரவை டொனால்டு ட்ரம்ப் ஒரேயடியாக ஆட்டம் காண செய்ததை அடுத்து, எதிர்வினையாற்ற வேண்டிய நெருக்கடிக்கு ஐரோப்பா தள்ளப்பட்டுள்ளது.
உக்ரைன் அமைதிப்பேச்சுவார்த்தை என சவுதி அரேபியாவில் சந்தித்துக்கொண்ட ரஷ்ய - அமெரிக்க மூத்த அதிகாரிகள், இருநாட்டு தூதரக உறவுகளை மேம்படுத்தவும், விளாடிமிர் புடினும் டொனால்டு ட்ரம்பும் நேரிடையாக சந்திப்பது தொடர்பிலும் விவாதித்துள்ளனர்.
அத்துடன், ரஷ்ய - அமெரிக்க அதிகாரிகள் குழு ஒன்றை நிறுவி உக்ரைன் போர் நிறுத்த பேச்சுவார்த்தையை முன்னெடுக்கவும் முடிவு செய்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |