நீடிக்கும் ஹார்முஸ் முற்றுகை... ஈரான் மீது நடவடிக்கை எடுக்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு
ஹார்முஸ் நீரிணையை முற்றுகையிட்டதற்குப் பொறுப்பான ஈரானிய அதிகாரிகள் மற்றும் பிறர் மீது தடைகளை விதிக்கும் நடவடிக்கையை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மேற்கொண்டுள்ளன.
சட்டத்திற்கு முரணானது
பிப்ரவரி மாதம் அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, உலகளாவிய எரிவாயு மற்றும் எண்ணெய் போக்குவரத்திற்கான முக்கியக் கடல்வழிப் பாதையை ஈரான் மூடியது.

இதனால், உலக நாடுகள் பல கடும் எரிபொருள் நெருக்கடி உட்பட பல்வேறு இடையூறுகளை எதிர்கொண்டு வருகிறது. இந்த நிலையில், இந்த முற்றுகை சர்வதேச சட்டத்திற்கு முரணானது எனக் கருதிய ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்கள், ஏற்கனவே உள்ள ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளின் வரம்பை விரிவுபடுத்தி, அதன் கீழ் மேலும் பல நபர்களை இலக்கு வைக்க வழிவகுக்கும் ஒரு தொழில்நுட்ப நடவடிக்கையை எடுத்துள்ளன.
மட்டுமின்றி, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஐரோப்பிய கவுன்சில் தெரிவிக்கையில், ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்தை சீர்குலைக்கும் ஈரானின் நடவடிக்கைகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, ஐரோப்பிய ஒன்றியம் இனி மேலும் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

ஈரான் மீதான பிரஸ்ஸல்ஸின் தண்டனை நடவடிக்கைகள், முன்னர் உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவிற்கும், மத்திய கிழக்கு முழுவதிலும் உள்ள ஆயுதக் குழுக்களுக்கும் அந்நாடு வழங்கிய இராணுவ ஆதரவை இலக்காகக் கொண்டிருந்தன.
உலகப் பொருளாதாரம்
மட்டுமின்றி, ஐரோப்பிய ஒன்றியமும் ஈரானில் நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகத் தடைகளை விதித்துள்ளது. மேலும், பயணத் தடைகள் மற்றும் சொத்து முடக்கங்களை உள்ளடக்கிய புதிய தடைகளுக்கு இலக்காகவுள்ள தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் எவற்றையும், ஐரோப்பிய ஒன்றியம் உடனடியாகக் குறிப்பிடவில்லை.
மட்டுமின்றி, ஐரோப்பிய ஒன்றியக் குடிமக்களும் நிறுவனங்களும், பட்டியலிடப்பட்ட நபர்களுக்கு நிதி, நிதிச் சொத்துக்கள் அல்லது பிற பொருளாதார உதவிகளை வழங்குவதற்கும் தடை விதிக்கப்படும்.

ஈரான் போர் மற்றும், வழக்கமாக உலகளாவிய எண்ணெய் உற்பத்தியில் ஐந்தில் ஒரு பங்கைச் சுமந்து செல்லும், ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டமை ஆகியவை உலகப் பொருளாதாரம் முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்தி, எரிசக்தி விலைகளை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்த்தியுள்ளன.
ஆனால், ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் போர் தொடுக்கும் முன்னர் ஹார்முஸ் நீரிணையில் எவ்விதமான கட்டுப்பாடுகளையும் ஈரான் நிர்வாகம் விதித்ததில்லை என்பதுடன், இஸ்ரேலும் அந்த நீரிணையை சர்வசாதாரணமாக பயன்படுத்தி வந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |