அமெரிக்க வரி நெருக்கடியால் இந்தியா பக்கம் திரும்பும் ஐரோப்பிய ஒன்றியம்
ஒரே ஒரு நாட்டை அதிகமாக சார்ந்திருப்பதை குறைக்க, இந்தியா போன்ற நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் ஈடுபட ஐரோப்பிய ஒன்றியம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பரிசீலிக்க வேண்டும்
அமெரிக்க இறக்குமதி வரிகளை அதிகமாக விதித்துள்ள நிலையில், இப்படியான வாய்ப்புகளை பரிசீலிக்க வேண்டும் என ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் தெரிவித்துள்ளார்.
ஜேர்மன் வணிகத் தலைவர்களுடனான மாநாட்டில் பேசிய வான் டெர் லேயன் இந்த ஆண்டு இந்தியாவுடன் ஒப்பந்தம் ஒன்றை முன்னெடுக்க விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.
மட்டுமின்றி, இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் இந்த விவகாரத்தில் தமக்கு உறுதி அளித்துள்ளதாலவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியா மட்டுமின்றி, தென்னாப்பிரிக்கா, மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பிற நாடுகளுடனும் ஐரோப்பிய ஒன்றியம் வர்த்தகத்தில் ஈடுபடும் என்று அவர் கூறியுள்ளார்.
கடும் எதிர்ப்பு
இருப்பினும், ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் இந்தியாவிற்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. உக்ரைன் மீதான புடினின் போருக்கு இந்தியா நிதியுதவி அளிப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது.
ஆனால், இந்தியா மற்றும் சீனா மீது ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் 100 சதவீத வரி விதிக்க வேண்டும் என்ற ட்ரம்பின் கோரிக்கையால் ஐரோப்பிய ஒன்றியம் தடுமாறி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |