அமுலுக்கு வந்த Entry Exit திட்டம்: சிக்கல் துவங்கியது...
ஏப்ரல் 10ஆம் திகதி Entry/Exit System (EES) முழுமையாக அமுலுக்கு வந்ததைத் தொடர்ந்து, இத்தாலிக்கு சுற்றுலா சென்றிருந்த பிரித்தானியர்கள் பலர் சிக்கலுக்குள்ளானார்கள்.
அமுலுக்கு வந்த Entry Exit திட்டம்
ஐரோப்பிய ஒன்றியத்தின் Entry/Exit System (EES) என்னும் திட்டத்தின் கீழ், ஷெங்கன் பகுதிக்கும், ஷெங்கன் பகுதியிலிருந்தும் குறுகிய கால பயணத்துக்காக பயணிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாத மக்கள், எல்லையில் தானியங்கி இயந்திரம் ஒன்றில் தங்கள் கைரேகை, புகைப்படம் (biometric data) போன்றவற்றை பதிவு செய்யவேண்டும்.

இந்த Entry Exit திட்டம், இம்மாதம், அதாவது, ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி முழுமையாக அமுலுக்கு வந்துள்ளது
சிக்கல் துவங்கியது...
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிவிட்டதால், இப்போது பிரித்தானியாவும் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடு அல்ல. ஆக, பிரித்தானியர்களுக்கும் இந்த விதி பொருந்தும்.
இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை, இத்தாலிக்கு சுற்றுலா சென்றுவிட்டு வீடு திரும்ப முயன்ற பிரித்தானியர்கள் எதிர்பாராத பிரச்சினை ஒன்றை எதிர்கொண்டார்கள்.
ஆம், இத்தாலியிலும் Entry Exit திட்டம் அமுலுக்கு வந்துள்ளதால், நாடு திரும்பும் பிரித்தானிய பயணிகள் பல மணி நேரம் இத்தாலி எல்லையில் காத்திருக்க நேர்ந்தது.

அதைவிட மோசமான விடயம் என்னவென்றால், சுமார் 130 பயணிகளை ஏற்றிக்கொண்டு பிரித்தானியா புறப்படவேண்டிய EASYJET நிறுவன விமானம் ஒன்று, பயணிகள் விமானம் ஏற தாமதம் ஆனாதால், வெறும் 30 பயணிகளுடன் புறப்பட்டுவிட்டது.
உண்மையில், Entry Exit திட்டத்தின் கீழ் தங்கள் கைரேகை, புகைப்படம் (biometric data) போன்றவற்றை பதிவு செய்ய பயணிகள் தாமதித்ததால், 50 நிமிடம் காத்திருந்த விமானம், அதற்கு மேலும் தாமதிக்க முடியாது என்பதால், 100 பயணிகளை விட்டு விட்டு புறப்பட்டுவிட்டது.

நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்த பிரித்தானியர்கள் சிலர் மயக்கமடைந்ததாகவும், வாந்தி எடுக்கும் நிலை ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்கள்.
அத்துடன், அவர்களில் பலர் இன்றுதான் மீண்டும் பிரித்தானியாவுக்கு புறப்பட உள்ளார்கள்.
ஆக, Entry Exit திட்டம் அமுலுக்கு வந்ததால் நேற்று இத்தாலியில் சிக்கலை எதிர்கொண்டுள்ளார்கள் பிரித்தானியர்கள். இனி இத்தாலியில் மட்டுமல்ல, ஷெங்கன் பகுதிக்கு பயணிக்கும் பிரித்தானியர்கள் இனி பல நாடுகளில் இதே நிலையை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என்பதுதான் நிதர்சனம் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |