ரஷ்ய எண்ணெய், வைரங்கள் மீது பாயும் புதிய பொருளாதார தடை: ஐரோப்பிய யூனியன் நடவடிக்கை
ரஷ்யாவின் மீதான புதிய பொருளாதார தடைக்கு ஐரோப்பிய ஒன்றியம் தயாராகி வருவதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
ரஷ்யா மீதான பொருளாதார தடை
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் பல மாதங்களாக நீண்டு வரும் நிலையில், இரு நாடுகளுக்கு இடையிலான போர் தாக்குதல் தற்போது சற்று மந்தமடைந்துள்ளது.
இருப்பினும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கையை கண்டித்து மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகின்றனர்.
அதன் ஒருப்பகுதியாக ரஷ்யா மீது மீண்டும் ஒரு புதிய பொருளாதார தடைக்கு ஐரோப்பிய ஒன்றியம் தயாராகி வருவதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
என்ஜின்களுக்கு தடை
இந்த பொருளாதார தடை தொகுப்பில், ட்ரோன் விமானங்களுக்கு பயன்படுத்த கூடிய என்ஜின்களை ரஷ்யாவிற்கு விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதைப்போல, ரஷ்ய வைரங்கள் மீதான ஏற்றுமதி தடை, ரஷ்ய எண்ணெய் விலையின் உச்சவரம்பு மீதான கட்டுப்பாட்டை வலுப்படுத்துவது போன்றவை இந்த பொருளாதார தடையில் உள் அடங்கும் என தெரியவந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |