ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பொருளாதாரத் தடை - இந்திய நிறுவனமும், இந்திய வம்சாவளி கேப்டனும் நேரடி பாதிப்பு
ஐரோப்பிய ஒன்றியம் சமீபத்தில் விதித்த பொருளாதாரத் தடையால் இந்திய நிறுவனமொன்றும், இந்திய வம்சாவளி நபரும் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியம் (EU), ரஷ்யாவுடன் எண்ணெய் வர்த்தகம் மேற்கொள்கின்ற கப்பல்கள் மீது புதிய தடைகள் விதித்துள்ளது.
இந்த நடவடிக்கையால், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) அடிப்படையிலான கப்பல் நிறுவனத்தின் இந்திய கிளையான Intershipping Services Hub Pvt Ltd நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், Argent எனும் கச்சா எண்ணெய் கப்பலின் தளபதி - இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அபினவ் கமலுக்கும் (Captain Abhinav Kamal) தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதாரத் தடைகளுக்கு உள்ளாகியுள்ள ஒரே இந்திய வம்சாவளி நபராக அபினவ் கமல் குறிப்பிடப்படுகிறார்.
ஐரோப்பிய ஒன்றியம், இவர் மீது ரஷ்ய எண்ணெய் வர்த்தகத்துக்கான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவி அளித்ததாக குற்றம் சுமத்தியுள்ளது.
இத்தடைகளால், Intershipping Services Hub-ஐச் சேர்ந்த ஐரோப்பிய சொத்துக்கள் முடக்கப்படும், மேலும் ஐரோப்பிய நிறுவனங்கள் அந்நிறுவனத்துடன் வணிகம் செய்ய அனுமதிக்கப்படாது. இருப்பினும், ஐரோப்பிய ஒன்றியத்தில் அல்லாத நாடுகள், அந்த நிறுவனத்துடன் வணிகம் செய்யலாம்.
இந்த தடைகள், உலக கப்பல் துறையில் ஐரோப்ப்பாவின் பங்கு முக்கியமானது என்பதால், Captain Kamal-க்கு பணியாற்றுவதிலும், சேவைகள் வழங்குவதிலும் பெரும் தடையாக அமையும்.
மேலும், இந்த தடைகள் இந்தியா சார்ந்த Nayara Energy என்ற ரிசைனரி நிறுவனத்தின் செயல்பாடுகளையும் பாதிக்கத் தொடங்கியுள்ளது. ரஷ்யாவின் Rosneft PJSC நிறுவனத்தின் 49.13% பங்குகளைக் கொண்டுள்ள Nayara, தற்போது முதல் கொள்முதல் மற்றும் ஏற்றுமதி ஒப்பந்தங்களில் இடைஞ்சலை சந்தித்து வருகிறது.
Bloomberg தகவலின்படி, Nayara-வில் டீசல் ஏற்றவேண்டிய Talara என்ற கப்பல், EU தடைகள் பிறப்பிக்கப்பட்ட பிறகு திடீரென விலகிச் சென்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
EU sanctions Indian shipping firm, Abhinav Kamal EU oil sanctions, Russia oil trade sanctions India, Nayara Energy Rosneft EU ban, Intershipping Services Hub Pvt Ltd, Crude oil tanker sanctions EU, India UAE shipping Russia oil, Talara ship Nayara diesel cargo, Global maritime EU restrictions, EU bans Indian-origin ship captain