அரிய மண் தாதுக்கள் விவகாரம்... சீனாவிற்கு எதிராக திரும்பும் ஐரோப்பிய ஒன்றியம்
சீனாவிலிருந்து வரும் அரிய மண் தாதுக்களை நம்பியிருப்பதை முடிவுக்குக் கொண்டுவர ஐரோப்பிய ஒன்றியம் செயல்பட்டு வருவதாக அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.
பொருளாதாரப் பாதிப்பு
பல முக்கிய துறைகளுக்கு முக்கியமான கனிமங்களின் ஏற்றுமதியில் சீனா மேலும் கட்டுப்பாடுகளை அறிவித்த நிலையிலேயே, ஐரோப்பிய ஒன்றியம் இந்த முடிவுக்கு வந்துள்ளது.

அரிய மண் தாதுக்களின் ஏற்றுமதி மீதான சீனாவின் புதிய கட்டுப்பாடுகள், ஐரோப்பிய ஒன்றியத்தின் சில நிறுவனங்களை உற்பத்தியை நிறுத்த நிர்பந்தித்து, பொருளாதார ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் கூறுகிறது.
உலகின் மிகப்பெரிய அரிய மண் தாது உற்பத்தியாளராக சீனா இருந்து வருகிறது. இந்த நிலையில், ஐரோப்பிய தொழில்களுக்கு குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட காலத்திற்கு முக்கியமான மூலப்பொருட்களின் மாற்று ஆதாரங்களுக்கான அணுகலைப் பாதுகாப்பதே இந்த முடிவின் நோக்கம் என்று ஐரோப்பிய ஒன்றிய தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் மாதத்திலிருந்து, சீனா சில ஏற்றுமதிகளுக்கு உரிமங்களை கோரியுள்ளது, இது உலகளாவிய உற்பத்தித் துறைகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அரிய மண் தொழில்நுட்பங்களின் ஏற்றுமதியில் சீனா இந்த மாதம் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தது.

மூலப்பொருட்கள் கூட்டாண்மை
ஐரோப்பிய ஒன்றிய திட்டத்தின் ஒரு முக்கிய அம்சம் மறுசுழற்சி என்றே வான் டெர் லேயன் கூறியுள்ளார். மேலும், சில நிறுவனங்கள் முக்கியமான மூலப்பொருட்கள் மற்றும் பேட்டரிகளில் 95 சதவீதம் வரை மறுசுழற்சி செய்ய முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, முக்கியமான மூலப்பொருட்களின் உற்பத்தி மற்றும் பிந்தைய செயலாக்கத்திலும் ஐரோப்பிய ஒன்றியம் கவனம் செலுத்த இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மட்டுமின்றி, உக்ரைன், அவுஸ்திரேலியா, கனடா, கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், சிலி மற்றும் கிரீன்லாந்து போன்ற நாடுகளுடன் முக்கியமான மூலப்பொருட்கள் கூட்டாண்மைகளை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளதாக உர்சுலா வான் டெர் லேயன் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |