திருப்பியடிப்போம்... ட்ரம்பின் வரி விதிப்புக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உலகளாவிய வரி விதிப்பு என்பது உலகப் பொருளாதாரத்திற்கு கிடைத்த வலுவான அடி என ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால்
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால், எதிர் நடவடிக்கைகளுடன் பதிலளிக்க ஐரோப்பிய ஒன்றியம் தயாராக இருப்பதாகவும் உர்சுலா குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எஃகு மீதான வரி விதிப்புகளுக்கு பதிலளிக்கும் விதமாக எதிர் நடவடிக்கைகளின் முதல் தொகுப்பை ஏற்கனவே இறுதி செய்துள்ளதாகவும் உர்சுலா தெரிவித்துள்ளார்.
அத்துடன், பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால், ஐரோப்பாவின் நலன்களையும் வணிகங்களையும் பாதுகாக்க மேலும் எதிர் நடவடிக்கைகளுக்கு தற்போது தயாராகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவிற்கு எதிராக எதிர்கால ஐரோப்பிய ஒன்றிய நடவடிக்கைகள் குறித்த எந்த விவரங்களையும் அவர் வழங்கவில்லை. ஆனால், மார்ச் 12 ஆம் திகதி அமுலுக்கு வந்த அமெரிக்க எஃகு மற்றும் அலுமினிய வரிகளுக்கு பதிலளிக்கும் விதமாக, இந்த மாதம் 26 பில்லியன் யூரோக்கள் மதிப்புள்ள அமெரிக்க பொருட்களுக்கு எதிர் வரிகளை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிகம் செலவிட நேரும்
இந்த நிலையில், அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பெரும்பாலான பொருட்களுக்கு 10 சதவீத குறைந்தபட்ச வரியை ட்ரம்ப் புதன்கிழமை அறிவித்தார். ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு 20 சதவீத வரி விதித்துள்ளார்.
ட்ரம்பின் இந்த அதிரடி நடவடிக்கையானது பணவீக்கத்தை அதிகரித்து அமெரிக்க மற்றும் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியைத் தடுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒரு உலகளாவிய வர்த்தகப் போரை உச்சக்கட்டத்தில் தொடங்கியுள்ளதாகவே பார்க்கப்படுகிறது.
மேலும், மளிகைப் பொருட்கள், மருந்துகள் மற்றும் போக்குவரத்துக்கென நுகர்வோர் அதிகம் செலவிட நேரும் என்றும், இதனால் வணிகம் கண்டிப்பாக பாதிக்கப்படும் என்றும் உர்சுலா எச்சரித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |