உக்ரைனிய வீரர்களுக்கு இராணுவ பயிற்சி...ஐரோப்பிய யூனியன் தலைவர் அறிவிப்பு
உக்ரைன் வீரர்களுக்கு ஐரோப்பிய யூனியன் இராணுவ பயிற்சி.
இந்த முன்முயற்சியின் மூலம் உக்ரைன் தேவையான திறன்களை பெறும்.
உக்ரைனிய வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் பணியை உருவாக்க ஐரோப்பிய யூனியன் திட்டமிட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் உக்ரைனின் தென்கிழக்கு பகுதியில் தற்போது 180வது நாளாக தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ரஷ்யாவின் இந்த ராணுவ நடவடிக்கையில் இதுவரை 9 ஆயிரத்திற்கும் அதிகமான உக்ரைனிய வீரர்கள் உயிரிழந்து இருப்பதாக அந்த நாட்டின் ஆயுதப் படைகளின் தலைமை தளபதி திங்கள்கிழமையான இன்று தெரிவித்து இருந்தார்.
#EU plans to create a mission to train Ukrainian soldiers
— NEXTA (@nexta_tv) August 22, 2022
This was announced by the head of the #European Union's foreign policy department, Josep Borrell. Within the framework of the initiative, the #Ukrainian military will receive the necessary skills in neighboring countries. pic.twitter.com/IaEGIaVLzK
இந்தநிலையில் உக்ரைனிய வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் பணியை உருவாக்க ஐரோப்பிய யூனியன் திட்டமிட்டு இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கை துறையின் தலைவர் ஜோசப் பொரெல் தெரிவித்து இருந்தார்.
இந்த முன்முயற்சியின் மூலம் உக்ரைனிய ராணுவம் அண்டை நாடுகளில் இருந்து தேவையான திறமைகளை பெறும் என தெரிவித்தார்.
கூடுதல் செய்திகளுக்கு: வைரலான இளம்பெண் பிரதமரின் பார்ட்டி வீடியோ: வெளியான போதைப்பொருள் பரிசோதனை முடிவுகள்!
இதற்கு முன்னதாக உக்ரைனிய வீரர்களுக்கு பிரித்தானியாவில் ஸ்வீடன் மற்றும் பின்லாந்து ராணுவம் பயிற்சி அளிப்பதாக உறுதியளித்துள்ளனர்.