அமெரிக்காவைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியம் பிரித்தானியாவுக்கு அளித்துள்ள அதிர்ச்சி
ஏற்கனவே ட்ரம்பின் வரிவிதிப்புகள் பிரித்தானிய ஸ்டீல் ஏற்றுமதியில் பெரும் தாக்கத்தை உருவாக்கியுள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியமும் தன் பங்குக்கு வரிகள் விதிக்க இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் பிரித்தானிய ஸ்டீல் தொழில்துறையினருக்கு கலக்கத்தை உருவாக்கியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் அளித்துள்ள அதிர்ச்சி
ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் இறக்குமதி செய்யப்படும் ஸ்டீல், இந்த அளவுக்குதான் இருக்கவேண்டும் என 2013ஆம் ஆண்டு அளவு நிர்ணயிக்கப்பட்டது.
அந்த அளவு எட்டப்படும் நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்டீல் மீது கடுமையான வரிகள் விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரெக்சிட்டைத் தொடர்ந்து பிரித்தானியாவும் ஐரோப்பிய ஒன்றிய நாடல்ல என ஆகிவிட்டதால், இந்த ஸ்டீல் மீதான வரிவிதிப்பில் பிரித்தானியாவும் சிக்க உள்ளது.
ஏற்கனவே பிரித்தானிய ஸ்டீல் மீது அமெரிக்கா 25 சதவிகித வரிகள் விதித்துள்ளதன் தாக்கத்தை பிரித்தானிய ஸ்டீல் தொழில்துறை அனுபவித்துவரும் நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் 50 சதவிகித வரிகள் விதிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதால், பிரித்தானிய ஸ்டீல் தொழில்துறையினர் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |