நெதன்யாகுவின் போக்கை தடுத்து நிறுத்த முடியவில்லை: ஐரோப்பிய ஒன்றியம் வருத்தம்
அமெரிக்கா உட்பட ஒருவருக்கும் நெதன்யாகுவின் போக்கை தடுத்த நிறுத்த முடியாமல் போனது என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகாரத் தலைவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
நெதன்யாகு உறுதி
காஸா மற்றும் லெபனானில் உள்ள போராளிகளை நசுக்க நெதன்யாகு உறுதியாக இருப்பதாக தெரிகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். காஸாவில் ஹமாஸ் படைகளை ஒழிக்க போர் பிரகடனம் செய்த இஸ்ரேல், மிக மோசமான தாக்குதல்களை முன்னெடுத்தது.
இதனால் கொல்லப்பட்ட பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை 32,000 கடந்தது. தற்போது லெபனானில் ஹிஸ்புல்லா படைகள் மீது இஸ்ரேலின் கவனம் திரும்பியுள்ளது. சர்வதேச அழுத்தம் இருந்தாலும், அதை மொத்தமாக புறந்தள்ளியுள்ள இஸ்ரேல், லெபனான் மீது தொடர் தாக்குதலை முன்னெடுத்து வருகிறது.
முயற்சிகளை ஆதரிப்பதாக
இந்த நிலையில், நெதன்யாகுவின் போக்கை தடுக்க முடியவில்லை என ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகாரத் தலைவர் ஜோசப் பொரெல் வருத்தம் தெரிவித்துள்ளார்.
லெபனான் விவகாரத்தில் 21 நாட்கள் போர் நிறுத்த நடவடிக்கைகளுக்கு பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா மேற்கொண்ட முயற்சிகளை ஆதரிப்பதாக குறிப்பிட்டுள்ள பொரெல்,
ஹமாஸ் படைகளை ஒழிப்பதாக குறிப்பிட்டு இஸ்ரேல் தொடர்ந்த போர் போல லெபனான் விவகாரமும் நீளும் என்றால், நாம் நீண்ட ஒரு போருக்கு தயாராக வேண்டும் என்பது உறுதி என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |